பிலிப்பைன்ஸில் அமெரிக்க தளங்கள் : மீண்டும் எதிர்க்கிறார் டுடெர்டே

ஜப்பானுக்கு செல்வதற்கான உத்தியோகபூர்வமான பயணத்தின் தொடக்கத்தில், பிலிப்பைன்ஸ் அதிபர் டுடெர்டே அமெரிக்காவை மீண்டும் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

தனது நாட்டில் உள்ள, ஐந்து தளங்களில் அமெரிக்கா தனது படைகளைப் பயன்படுத்த அனுமதிப்பதாகச் சமீபத்தில் ஒப்பந்தம் செய்திருந்தாலும் கூட, டோக்கியோ செல்லும் டுடெர்டே, பிலிப்பைன்ஸில் எந்த ஒரு வெளிநாட்டு ராணுவப் படைகள் இருப்பதையும் தான் விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

அண்மையில் வெளிப்படையாகவும் மற்றும் முரண்பாடான கருத்துக்களையும் பேசிய பிலிப்பைன்ஸ் அதிபர், தனது அரசு உட்பட, எல்லோரிடமும், அவர் தனது நாட்டை எந்தப் பாதையை நோக்கிக் கொண்டு சொல்லப்போகிறார் என்பதில், உறுதியற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.