அரசு நிறுவனத்தின் தலைமைப் பதவியில் மகளை நியமித்தது ஏன்?: அதிபரிடம் விளக்கம் கேட்கும் அங்கோலா உச்சநீதிமன்றம்

அங்கோலா நாட்டின் அதிபர் ஜோஸ் எடுவார்டோ டோஸ் சான்டோஸை, அவர் ஏன் தனது மகளை அரசு எண்ணெய் நிறுவனமான சோனான்கோலின் தலைவராக நியமித்தார் என்பதை விளக்குமாறு அந்நாட்டின் உச்சநீதிமன்றம் கோரியுள்ளது.

படத்தின் காப்புரிமை AP
Image caption அங்கோலா அதிபர் ஜோஸ் எடுவார்டோ டோஸ் சான்டோஸ்

அதிபர் ஜோஸின் மகள் அரசு எண்ணெய் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கோலாவைச் சேந்த ஒரு வழக்கறிஞர்கள் குழுவொன்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது அந்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது.

37 ஆண்டுகளாக அதிபராக அதிகாரத்தில் இருக்கும் ஜோஸ் சான்டோஸ் தனது நடவடிக்கைகள் குறித்து இது வரை விளக்கமளித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் தொழிலதிபரான அவரது மகள் பொதுவாக ஆப்ரிக்காவின் பணக்கார பெண்மணி என்று விவரிக்கப்படுகிறார்.

கடந்த ஜூன் மாதத்தில் சோனான்கோல் நிறுவனத்தை தலைமை ஏற்று நடத்த அந்நிறுவனத்தின் தலைமைப் பதவியில் ஜோஸின் மகள் நியமிக்கப்பட்டார்.

இந்த ஏற்பாடு , வருங்காலத்தில் அவரை அவர் தந்தையின் இடத்தில் அமர வைப்பதற்கான முயற்சியின் திட்டம் என்று சில விமர்சகர்கள் கருதுகின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்