வட சிரியாவில் 20 குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் திட்டமிட்டதாக இருந்தால் போர்க்குற்றம் - யூனிசெஃப்

யுனிசெப் என்று அறியப்படும், ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கான முகமை, வடக்கு சிரியாவில், புதன் கிழமையன்று, கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த ஹாஸ் கிராமத்தில் நடந்த தாக்குதல், வேண்டுமென்றே நடத்தப்பட்டதாக இருந்தால், அது போர்க் குற்றமாகக் கருதப்படும் என்று கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தாக்குதலில் பாதிக்கப்பட்ட பள்ளி

அந்தக் கிராமத்தில் நடந்த வான்வழி தாக்குதலில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தாக்குதலில் ஒரு பள்ளி மற்றும் குடியிருப்புப் பகுதி ஆகியவை தாக்கப்பட்டுள்ளன.

ஐ.நா.வுக்கான ரஷிய தூதர், விட்டாளே சுர்க்கின் இதில் ரஷியா ஈடுபட்டிருக்காது என தான் நம்புவதாகத் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

சிரியாவின் அரசு தொலைக்காட்சியில், தீவிரவாதிகளின் நிலைகள் இலக்கு வைக்கப்பட்ட போது, அவர்கள் கொல்லப்பட்டனர் என்று இத்தாக்குதல் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது

இட்லிப் மாகாணத்தில் உள்ள ஹாஸ் கிராமம் எதிர்தரப்பின் பலம் பொருந்திய ஒரு முக்கிய பகுதியாகும். .