ஆச்சரியமூட்டும் வகையில், லாபத்தைப் பதிவிட்ட டாய்செ வங்கி

ஜெர்மனியின் பெரிய கடன் அளிக்கும் நிறுவனமான டாய்செ வங்கி, ஆச்சரியமூட்டும் வகையில், இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் லாபத்தைப் பதிவிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஜூன் மாதம் சர்வதேச நாணய நிதியத்தால் உலகிலேயே ஆபத்தான வங்கி என விவரிக்கப்பட்டது டாய்செ வங்கி,

செப்டம்பர் மாத இறுதி வரையிலான மூன்று மாதங்களில், சுமார் 300 மில்லியன் டாலர்களை லாபமாக அறிவித்துள்ளது.

ஆனால், டாய்ச்செ வங்கி, வீட்டுக் கடன்களின் அடிப்படையிலான பத்திரங்களை தவறாக விற்றதாக எழுந்துள்ள விவகாரத்தில் அமெரிக்காவில் பெரிய அளவில் நிதி அபராதத்தைச் செலுத்த வேண்டியுள்ளது. அதற்கான பேரப்பேச்சில் ஈடுபட்டுள்ளது.

இந்த பேரப்பேச்சின் முடிவு தெரியும் வரை, இந்த வங்கியின் எதிர்காலம் குறித்த அச்சம் விலக வாய்ப்பு குறைவு என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.