இரண்டு மாடல் கார்களின் புதிய மாதிரிகளை பிரிட்டனில் உருவாக்க நிசான் முடிவு

ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனம், நிசான், பிரிட்டனில் பிரபலமான தனது இரண்டு மாடல் கார்களின் புதிய வடிவங்களை உருவாக்க முடிவு செய்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக வாக்களித்ததற்கு (பிரெக்ஸிட்) பிறகான முதல் பெரிய ஒப்பந்தம் இதுவாகும்.

ஜூன் மாதம் நடைபெற்ற பிரெக்ஸிட் வாக்கெடுப்புக்கு பிறகும், சன்ட்டர்லாந்தில் உள்ள தனது ஆலை லாபகரமாக இயங்கக் கூடிய அளவில் செயல்படும் சூழ்நிலை இருக்கும் என பிரிட்டன் அரசாங்கம் உத்தரவாதங்களை அளித்துள்ளதாக நிசான் தெரிவித்துள்ளது.

பிரிட்டிஷ் பிரதமர் தெரீசா மே, பிரிட்டன் வர்த்தகத்திற்குத் திறந்த நிலையில் உள்ளது என்பதைக் காட்டும் நம்பிக்கை வாக்கு தான் இது என்று கூறினார்.