வரும் குளிர்காலம் சிரியா மக்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும்: ஐ.நா.,

சிரியாவில் ஐந்து வருடங்களுக்கு முன் போர் தொடங்கிய காலத்திலிருந்து வரக்கூடிய குளிர்காலம், சிரியா மக்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும் என ஐ.நா., எச்சரித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

சிரியாவிற்கான ஐ.நாவின் மனித நேய நடவடிக்கைகளின் தலைமை அதிகாரி ஜான் ஈகலாண்ட், சிரியாவில் நடந்து வரும் கசப்பான, கொடூரமான என்று அவரால் அழைக்கப்படும் சண்டை, மேலும் இரக்கமற்றதாக மாறிவிட்டது என தெரிவித்துள்ளார்.

குளிர்காலம் வரவிருப்பதால், சிரியாவில் உதவி விநியோகம் செய்ய முயற்சிக்கும் நிறுவனங்களுக்கு, போர் புரியும் தரப்புகளும் அதன் ஆதரவாளர்களும் உதவ வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

வரவிருக்கும் மாதங்கள், அதிகப்படியான சிரியா மக்களுக்கு மிக மிகக் குளிரானதாகக் இருக்கும் என தான் அஞ்சுவதாக ஈகலாண்ட் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்