பெல்ஜியம் - கனடா இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகுமா?

கனடா உடன் ஐரோப்பிய ஒன்றியம் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வது தற்போது ஒரு முக்கிய கட்டத்திற்கு வந்துவிட்டதாக பெல்ஜிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கெல் மற்றும் துணை பிரதமர் டிடியர் ரெய்ண்ட்ர்ஸ்

இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை சுமார் ஏழு ஆண்டுகளுக்கு நடைபெற்றது. இறுதியாக, அது இன்று கையெழுத்தாக உள்ளது.

ஆனால், தெற்கு பெல்ஜியத்தில் உள்ள பிரெஞ்சு மொழி பேசும் மக்கள் இதனை நிராகரித்துள்ளனர்.

பெல்ஜியம் நாட்டின் பிராந்திய மற்றும் மொழிவாரி சமூகங்களின் தலைவர்கள் திருத்தப்பட்ட ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அது நிலுவையில் உள்ள கவலைகளை தணிக்கும் என்றும் அந்நாட்டு பிரதமர் சார்லஸ் மைக்கெல் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதற்குமுன், இந்த திருத்தங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மற்ற 27 நாடுகளின் உறுப்பினர்கள் முன்னிலையில் வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்