சிரியாவில் ஐ.எஸ் வசமுள்ள ராக்கா நகரை கைப்பற்றுவதே இறுதி இலக்கு : துருக்கி அதிபர்

சிரியாவில் ஐ.எஸ் குழுவினரின் கோட்டையாக கருதப்படும் ராக்கா நகரம் குறிவைக்கப்படும் என்று துருக்கி அதிபர் ரஸீப் தாயிப் எர்துவான், சிரியாவில் உள்ள ராணுவ நடவடிக்கைக்கான நோக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption துருக்கி அதிபர் ரஸீப் தாயிப் எர்துவான்

துருக்கி தற்போது சிரியாவின் எதிர்த்தரப்பு போராளிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.

அவர்கள் வட சிரியாவில் உள்ள எல்லைப்பகுதியில் நிலப்பரப்பை கைப்பற்றி வருகின்றனர்.

இந்த படையினர் முதலில் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள அல்-பாப் நகரை கைப்பற்றுவார்கள் என்று எர்துவான் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, மன்பிஜ் நகரை தாக்குவார்கள் என்றும் கூறியுள்ளார்.

மன்பிஜ் நகரம் குர்தீஷ் போராளிகளின் வசமுள்ளது. இவர்கள் பயங்கரவாதிகள் என துருக்கி கருதுகிறது.

ஆனால், இறுதி இலக்கு என்பது ராக்கா நகரமாக இருக்கும் என்று எர்துவான் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்