விசாரணையில் ஆஜராக போவதில்லை - குடியேறி எதிர்ப்பு டச்சு அரசியல்வாதி வில்டர்ஸ்

தான் திங்கட்கிழமை எதிர்கொள்ள வேண்டிய நீதிமன்ற விசாரணையில், ஆஜராக போவதில்லை என்று குடியேறிகளுக்கு எதிரான கொள்கையுடைய டச்சு அரசியல்வாதி கீர்ட் வில்டர்ஸ் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption இன வெறுப்புணர்வை தூண்டக்கூடிய வகையில் பேசியதாக கீர்ட் வில்டர்ஸ் 2-வது விசாரணையை சந்தித்து வருகிறார்.

இந்த விசாரணை அவர் குரலை ஒடுக்குவதற்காக , அரசியல் உள்நோக்கோடு தொடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த வழக்கு 2014 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின்போது அவர் பேசியதோடு தொடர்புடையதாகும்.

நெதர்லாந்தில் மொராக்கோ நாட்டிலி்ருந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கை அவருடைய கட்சி குறையச் செய்யும் என்று வில்ட்ர்ஸ் தெரிவித்திருந்தார்.

இது போன்ற கருத்துக்கள் பிற அரசியல்வாதிகளாலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்