செவ்வாயில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் சிறிய விண்கலம் மோதிய சம்பவம் உறுதி செய்யப்பட்டது

கடந்த வாரம் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் விண்கலத்திலிருந்து பிரிந்து சென்ற கலன் ஒன்று செவ்வாயில் மோதிய சம்பவத்தில், என்ன நடந்தது என்பதைப் பற்றிய துப்புகளைத் தரும் புதிய புகைப்படங்கள் செவ்வாய்க் கிரகத்திலிருந்து கிடைக்கப்பட்டுள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption செவ்வாயில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் சிறிய விண்கலம் மோதிய சம்பவம் உறுதி செய்யப்பட்டது

நாசாவினால் வழங்கப்பட்ட இந்த புகைப்படங்கள், ஷியபரேல்லி தரையிறங்கிக்கு ஏற்பட்ட விபத்தை எவ்வித சந்தேகத்துக்கும் இடமளிக்காமல் உறுதிப்படுத்தி உள்ளன.

ஒரு ஆழமற்ற பள்ளத்தில் கேப்சூலின் எஞ்சிய பகுதிகளை இந்த புகைப்படங்கள் காட்டுகின்றன. அந்த பகுதிகளை சுற்றி கருமையான ஒரு திட்டு காணப்படுகிறது. எரிபொருள் கலன் வெடித்திருப்பதற்கான சாத்தியக்கூறுகளை இந்தக் கருமையான பகுதி கோடிட்டுக் காட்டுகிறது..

செவ்வாயை நோக்கி ஷியபரேல்லி வேகமாக தரையிறங்கிய போது, அதன் பாராசூட் மற்றும் இதுபோன்ற நேரத்தில் கேப்சூலின் வேகத்தை குறைக்க வடிவமைக்கப்பட்டிருந்த ராக்கெட்கள் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்பதை இறுதி சில நிமிடங்களின் போது அந்த கேப்சூலிடம் பெறப்பட்ட தகவல்கள் உறுதி செய்கின்றன

தொடர்புடைய தலைப்புகள்