சவுதி: பெண்களுக்கான முதல் மொபைல் கடை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சவுதி: பெண்களுக்கான முதல் மொபைல் கடை

சவுதி அரேபியாவில் அந்தரங்கம் முக்கியமானது. குறிப்பாக பெண்களின் புகைப்படங்கள் தொடர்பில் இது கூடுதல் அவசியமானதும் கூட.

பெண்களின் புகைப்படங்கள் தொடர்பான பிளாக்மெயில் புகார்கள் நூற்றுக்கணக்கில் ஒவ்வொரு மாதமும் சவுதி காவல்துறைக்கு வருகின்றன.

இந்த பிரச்சனைக்கான தீர்வாக பெண்களுக்கான பிரத்யேக செல்பேசி பழுதுபார்க்கும் கடை ஒன்றை திறந்திருக்கிறார் ஒரு பெண்.

தனது இந்த முயற்சி சவுதி அரேபிய பெண்களின் அந்தரங்கத்தை பாதுகாக்க உதவும் என்று அவர் நம்புகிறார்.