தாய்லாந்து அரசர் பூமிபோன் அடூன்யடேட்டுக்கு அஞ்சலி செலுத்த முதல் முறையாக பொது மக்களுக்கு அனுமதி

எழுபது ஆண்டுகளுக்கு ஆட்சி செய்து, இந்த மாத துவக்கத்தில் காலமான தாய்லாந்து மன்னர் பூமிபோன் அடூன்யடேட்டின் சவப்பெட்டியின் முன் அவருக்கு தங்களின் இறுதி மரியாதையை செலுத்த முதல் முறையாக பொது மக்களை தாய்லந்து அதிகாரிகள் அனுமதித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption மன்னருக்கு அஞ்சலி செலுத்த குழுமியுள்ள மக்கள்

காலமான மன்னரின் உடல், அரசு மரியாதையுடன் வைக்கப்பட்டுள்ள பாங்காக் அரண்மனையின் வெளியே இரவு முழுவதும் சாரை சாரையாக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தாய்லாந்து அரசர் பூமிபோன் அடூன்யடேட் (கோப்பு படம்)

மன்னரின் உடல் கிடத்தப்பட்டுள்ள அரியணை அரங்குக்குள் ஒரு நாளைக்கு 10,000 பேர் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவர் என்று தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மன்னருக்கு இறப்புக்கு அதிகாரபூர்வ துக்கம் அனுசரிப்பது ஒரு வருடம் வரை நீடிக்கும் .