ஆஸ்திரேலியா: பொழுதுபோக்கு பூங்காக்களில் அதிரடி பாதுகாப்பு சோதனை நடத்த குயின்ஸ்லாந்து மாநில அரசு உத்தரவு

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்களிலும் அதிரடி பாதுகாப்பு சோதனை நடத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Image copyrightJASON O'BRIEN/GETTY IMAGES
Image caption விபத்து ஏற்பட்ட பொழுதுபோக்கு பூங்கா

கடந்த வாரத்தில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள மிகப் பிரபலமான கோல்ட் கோஸ்ட் கடற்கரையில் அமைந்துள்ள ட்ரீம்வேர்ல்ட் என்றழைக்கப்படும் பொழுதுபோக்கு பூங்காவில், நீர் சவாரி செய்யும் பிரிவில் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பான ஆய்வு விரைவில் தொடங்குவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Image copyrightJASON O'BRIEN/GETTY IMAGES
Image caption விபத்து ஏற்பட்ட ட்ரீம்வேர்ல்ட் பொழுதுபோக்கு பூங்கா

மேலும், இம் மாத துவக்கத்தில் குயின்ஸ்லாந்தில் ஒரு கட்டட மனையில் சுவரொன்று இடிந்து விழுந்ததில் இருவர் பலியானார்கள்.

பொழுது போக்கு பூங்காக்களில் தற்போது நடக்கவுள்ள தணிக்கை, தற்போது அமலில் இருக்கும் அபராதம் வீதிமீறல்களை தடுத்து நிறுத்துவதற்கு போதுமானதாக இருக்குமா அல்லது வேறு மேல் நடவடிக்கைகள் தேவைப்படுமா என்பது குறித்து ஆய்வு செய்யும் என்று குயின்ஸ்லாந்து மாநில பிரதமர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்