ஐரோப்பிய ஒன்றியத்துடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்: பிரஸல்ஸ் செல்கிறார் கனடா பிரதமர்

ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது தொடர்பாக பிரஸல்ஸ் செல்ல உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

பெல்ஜியத்தில் இந்த ஒப்பந்தம் அரசியல் ஆட்சேபணைகளைக் கடந்து வந்துள்ள நிலையில், கனடா பிரதமர் இந்த பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.

இந்த ஒப்பந்தம் மிகப்பெரிய செய்தி என்றும், இந்த தருணத்தில் தான் அங்கு செல்வதை ஆர்வத்துடன் எதிர்நோக்குவதாகவும் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னர், நேற்று (வெள்ளிக்கிழமை) ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு பெல்ஜியா மாகாணமான வாலூனியாவில் உள்ள நாடாளுமன்றம் ஆதரவு தெரிவித்து வாக்களித்திருந்தது.

பன்னாட்டு நிறுவனங்களின் நிலையை வலுப்படுத்தி, விவசாயிகள் மீது பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் இருப்பதாக அங்கு கவலைகள் எழுந்திருந்தன.

7 ஆண்டுகளாக பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு உருவான இந்த ஒப்பந்தத்தில் பெல்ஜிய அரசாங்கம் கையெழுத்திடுவதற்குமுன், தனது அனைத்து பிராந்தியங்களின் ஒப்புதலையும் அது பெற வேண்டியுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்