வடகொரியாவிடமிருந்து சீனா நிலக்கரி வாங்கக் கூடாது - அமெரிக்கா

வட கொரியாவுக்கு மிக முக்கிய அந்நிய செலாவணி ஆதராமாக விளங்குகின்ற, நிலக்கரி இறக்குமதியை நிறுத்திவிட சீனாவை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஆயுத திட்டங்களுக்கு இந்த வருமானம் செல்வதை காட்டுகின்ற சான்று இருந்தாலன்றி இறக்குமதியை சீனா அனுமதிப்பது போல தோன்றுகிறது

வட கொரியாவின் அணு திட்டத்திற்கு நிதி ஆதரவு வழங்குவதற்காக இந்த வருமானம் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்கா கவலையடைந்துள்ளது.

இந்த வர்த்தகம் சீனா இந்த விஷயத்தில் கொடுத்திருந்த உறுதிமொழிகளை மீறுவதாக அமெரிக்காவின் துணை வெளியுறவு செயலர் ஆண்டனி பிலின்கென் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தைக்கு முன்னர் கூறினார்.

ஐநாவின் தடைகளுக்கு இசைவாக நடக்கவும், மனிதநேய நோக்கங்களுக்கு அல்லாத விடயங்களில் இந்த வருமானத்தை பயன்படுத்துகின்ற இறக்குமதியை நிறுத்தவும் சீனா வாக்குறுதி அளித்திருக்கிறது.

ஆயுத திட்டங்களுக்கு இந்த பணம் செல்வதை காட்டுகின்ற சான்று இருந்தாலன்றி இறக்குமதியை சீனா அனுமதிப்பது போல தோன்றுவதாக பிலின்கென் தெரிவித்திருக்கிறார்,

தொடர்புடைய தலைப்புகள்