கிளர்ச்சியாளர்களிடம் இழந்த பகுதியை கைப்பற்ற சிரியா அரசு தொடர் தாக்குதல்

அலெப்போவின் கிழக்கில் அரசப் படைகளின் முற்றுகையை மீண்டும் தகர்க்க முயன்று வெள்ளிக்கிழமை கிளர்ச்சியாளர்களால் மீண்டும் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் சிரியாவின் போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images
Image caption கடும் விமான மற்றும் பீரங்கி தாக்குதல்களால் அரசு பதிலடி

அரசின் பதிலடி தாக்குதலின் ஒரு பகுதியாக கடும் விமானத் தாக்குதல்களும், பீரங்கி தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருவதாக செயற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

கிளர்ச்சியாளர்கள் நகரத்தின் மேற்கு மாவட்டங்களில் நடத்திய ஷெல் குண்டு தாக்குதலில் மக்கள் பலர் காயமடைந்திருப்பதாக சிரியாவின் அரசு ஊடகம் தெரிவித்திருக்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்