சௌதி கூட்டணி படைகளின் தவறான வான்வழி தாக்குதலில் 17 பொது மக்கள் பலி

சௌதி அரேபியாவின் தலைமையிலான கூட்டணிப் படையினர் டாயிஸ் நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு நகரில் நடத்திய விமானத் தாக்குதலில் குறைந்தது 17 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஏமனிலிருந்து வருகின்ற அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை AP
Image caption தவறுதலாக பல வீடுகள் தாக்கப்பட்டதால் கொல்லப்பட்டோரில் பல பெண்களும் குழந்தைகளும் அடங்குகிறது

தவறுதலாக பல வீடுகள் தாக்கப்பட்டதால் கொல்லப்பட்டோரில் பல பெண்களும் குழந்தைகளும் அடங்குவதாக கூறப்படுகிறது.

ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும், சௌதி ஆதரவு அளிக்கின்ற அதிபர் அப்திராபு மன்சூர் ஹாதிக்கு விசுவாசமான படைப்பிரிவுகளுக்கும் இடையில் நடைபெறும் இந்த போரில் டாயிஸ் ஒரு கேந்தர முக்கியத்துவம் வாய்ந்த களமாகும்.

சௌதி தலைமையிலான கூட்டணி படையினரின் விமானத் தாக்குதலால் பல பொது மக்கள் கொல்லப்பட்டிருப்பதற்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தொடர்புடைய தலைப்புகள்