இரண்டு தசாப்தங்களில் முதல் முறையாக அதிபர் தேர்தலில் வாக்களிக்கவுள்ள மால்டோவா மக்கள்

கடந்த இருபது ஆண்டுகளில் முதல் முறையாக அதிபர் தேர்தல் நடக்கவுள்ள மால்டோவாவில் மக்கள் வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிகள், இன்னும் சற்று நேரத்தில் திறக்கப்படவுள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அதிபர் தேர்தலில் வாக்களிக்கவுள்ள மால்டோவா மக்கள்

1996-ஆம் ஆண்டு முதல், இந்த முன்னாள் சோவியத் குடியரசின் அதிபர்களை மால்டோவாவின் நாடாளுமன்றம் தேர்வு செய்து வந்தது.

ரஷ்யாவுடன் நெருக்கமான உறவுகளை விரும்புபவர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒருங்கிணைப்பை விரும்புபவர்கள் ஆகிய இரு பிரிவினரில் யாரை மக்கள் தெளிவாக தேர்வு செய்யப் போகிறார்கள் என்பதை தற்போது நடக்கவுள்ள வாக்களிப்பு முடிவு செய்யும் என்று பார்க்கப்படுகிறது.

ஐரோப்பா கண்டத்தின் மிக ஏழை நாடாக உள்ள மால்டோவா, உக்ரேன் மற்றும் ரோமானியா ஆகிய நாடுகளுக்கு இடையே அமைந்துள்ளது.

தொடர்ச்சியான பெரும் ஊழல் சம்பவங்களாலும் மால்டோவா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.