சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஐரோப்பா விரையும் கனடா பிரதமர்

ஐரோப்பிய ஒன்றியத்தோடு பேரம் பேசி தீர்வு காண ஏழு ஆண்டுகள் பிடித்திருக்கும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிரஸல்ஸ் செல்கிறார்.

Image caption இந்த ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தைகளை இதுவரை போராட்டங்கள் தடுத்து வந்துள்ளன

பெல்ஜியத்தின் வல்லோனியா பிராந்தியம் எழுப்பிய எதிர்ப்புக்களால் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதில் சிக்கல் தொடர்ந்து வந்தது. ஆனால் வியாழக்கிழமை இதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை EPA
Image caption இறுதியில் பெல்ஜியம் சனிக்கிழமை இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

பொருட்களுக்கான சுங்க வரிகளில் 99 சதவீத வரிகளை இந்த ஒப்பந்தம் நீக்குகிறது.

ஆண்டுக்கு மேலும் 12 பில்லியன் (ஆயிரத்து 200 கோடி) டாலர் அளவுக்கு வர்த்தகத்தை இந்த ஒப்பந்தம் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்