மத்திய ஆப்ரிக்க குடியரசில் பிரான்ஸின் சான்காரி நடவடிக்கை இன்று முறையாக நிறைவு

மத்திய ஆப்ரிக்க குடியரசில் பிரான்ஸ் மேற்கொண்டு வரும் நடவடிக்கையை பிரான்சிஸின் பாதுகாப்பு அமைச்சர் ஞாயிற்றுக்கிழமை முறையாக முடிவுக்கு கொண்டு வருகிறார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஐநா அமைதி காப்பு படையினர் 2014 ஆம் ஆண்டு அனுப்பப்பட்டனர்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இடம்பெற்றிருக்கும் கிளர்ச்சி குழுவினரால், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய அதிபர் பிராங்சுவா போஸீஸே பதவிலிருந்து அகற்றப்பட்டதை தொடர்ந்து, பிரான்ஸின் சான்காரி என்ற நடவடிக்கை தொடங்கியது.

இருப்பினும், இன மற்றும் மத முறுகல் நிலைகள் அவ்வாறே தொடர்கின்றன. 10 ஆயிரம் ஐநா அமைதி காப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளபோதிலும் சமீபத்திய வாரங்களில் வன்முறை அதிகரித்திருக்கிறது.

இந்நாட்டில் மேற்கொண்டு வரும் நடவடிக்கையை நிறுத்தப் போவதில்லை என்று பிரான்ஸ் அரசு உறுதி அளித்திருக்கும் நிலையிலும், நாடு மீண்டும் ஒரு உள்நாட்டு போரில் சிக்கி கொள்ளும் என்று தலைநகரான பான்குய்-இல் வசிப்போர் பீதியடைந்துள்ளனர்

தொடர்புடைய தலைப்புகள்