இத்தாலியின் முற்கால நகர்களிலும், கிராமங்களிலும் மற்றொரு நிலநடுக்கம்

கடந்த ஆகஸ்ட் மாதம் ஏறக்குறைய 300 பேர் நிலநடுக்கத்தால் பலியான பகுதிக்கு மிக அருகே, இத்தாலியின் மத்திய பகுதியிலுள்ள முற்கால நகர்களிலும், கிராமங்களிலும் மற்றொரு நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது.

படத்தின் காப்புரிமை EPA
Image caption தேவையான நிதி ஆதாரங்கள் திரட்டப்பட்டு, இடிந்த கட்டங்கள் மீண்டும் கட்டப்படும் என்று பிரதமர் மட்டயோ ரொன்சி தெரிவிப்பு

சுமார் 20 பேர் காயம் அடைந்துள்ளனர். கடந்த வாரம் நிகழ்ந்த சக்தி வாய்ந்த நில அதிர்வுகளுக்கு பின்னர் மக்கள் வெளியேற்றப்பட்டதால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

இடைகாலத்தை சேர்ந்த புனித பென்னடிக்டின் பிறந்த இடமும், நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்த நகருமான நோர்ஷியாவில் இருந்த பேராலயத்தையும், ஆகஸ்ட் மாதம் அழிவுக்குள்ளாகிய அமத்ரைஸில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களையும் இந்த நிலநடுக்கம் அழித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AP
Image caption கடந்த வாரம் நிகழ்ந்த சக்தி வாய்ந்த நில அதிர்வுகளுக்கு பின்னர் மக்கள் வெளியேறியுளள்தால் பல உயிர்கள் தப்பியுள்ளன

இவற்றிற்கு தேவையான நிதி ஆதாரங்கள் திரட்டப்பட்டு, அனைத்தும் மீண்டும் கட்டப்படும் என்று பிரதமர் மட்டயோ ரொன்சி தெரிவித்திருக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை வழிபாடுகள் அனைத்தையும் தேவாலயங்களுக்கு வெளியில் நடத்த பாதிரியார்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

6.5 அளவிலான இந்த நிலநடுக்கம் 1980 ஆம் ஆண்டுக்கு பிறகு இத்தாலியில் நிகழ்ந்திருக்கும் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கமாகும்.