ஐரோப்பிய ஒன்றியம் கனடா இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

பெல்ஜியத்தின் வலோனிய பிராந்தியத்தின் எதிர்ப்புகளுக்கு, இறுதியில் தீர்வு கண்ட பின்னர், பேரம் பேசுவதற்கு ஏழு ஆண்டுகள் பிடித்த அடையாள முக்கியத்துவம் வாய்ந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் ஐரோப்பிய ஒன்றியமும், கனடாவும் கையெழுத்திட்டுள்ளன.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images
Image caption கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (நடுவில்) ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களின் தலைவர்களோடு இணைந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்

ஐரோப்பிய ஒன்றிய ஆணைத்தின் தலைவர் ஜாங் குளோடு யுங்கர் உள்பட அந்த அமைப்பின் தலைவர்கள் மூவரோடு, திட்டமிட்டதைவிட தாமதமாக பிரஸல்ஸில் நடைபெற்றுள்ள இந்த கையெழுத்திடும் நிகழ்வில் கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டார்.

பிறரால் பின்பற்றப்படும் அளவிற்கு இந்த ஒப்பந்தம் பன்னாட்டு தரத்தை கொண்டுள்ளதாக ஜாங் குளோடு யுங்கர் இது பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார்.

Image caption இந்த ஒப்பந்ததத்திற்கான பேச்சுவார்த்தைகள் ஏழு ஆண்டுகளாக நடைபெற்றன

பொருட்களுக்கான சுங்க வரிகளில் 99 சதவீத வரிகளை இந்த சி இ டி ஏ ஒப்பந்தம் நீக்குகிறது.

ஆண்டுக்கு மேலும் 12 பில்லியன் (ஆயிரத்து 200 கோடி) டாலர் அளவுக்கு வர்த்தகத்தை இந்த ஒப்பந்தம் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

தொழில்நுட்ப கோளாறை சரி செய்வதற்காக விமானம் திரும்பி சென்றதை அடுத்து பிரதமர் ட்ரூடோவின் பயணம் ஞாயிற்றுக்கிழமைக்கு தாமதமாகியது.

தொடர்புடைய தலைப்புகள்