இராக் தலைநகர் பாக்தாத்தில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்; இதுவரை 10 பேர் பலி

மொசூல் நகரில் உள்ள ஐ.எஸ் குழுவினரை விரட்டும் நோக்கில் இராக் அரசு படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இராக் தலைநகர் பாக்தாத்தில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

ஹுரியா மாவட்டத்தில் உள்ள காய்கறி மற்றும் பழங்கள் விற்கும் சந்தையில் நிகழ்ந்த ஒரு கார் குண்டு தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர்.

பாக்தாத்தில் ஷியா பிரிவினர் வசிக்கும் முக்கிய பகுதிகளை குறிவைத்து பல தாக்குதல்கள் நடந்துள்ளன.

மொசூலின் வடக்கே உள்ள டல் அஃபார் நகரில் ஷியா தீவிரவாத குழுவினர் முன்னேறி வரும் நிலையில், அங்கு கூடுதல் படையினரை ஐ.எஸ் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தீவிரவாத குழுக்களின் தலைவர்களில் ஒருவர், மொசூல் நகருக்கான போர் எளிதில் உல்லாசமாக முடிக்கக்கூடிய ஒன்றல்ல, இந்த போர் முடிய பல மாதங்கள் ஆகலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்