ரியோ டி ஜெனிரோவின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிராட்டஸ்டண்ட் பாதிரியார்

பிரேசிலில், பிராட்டஸ்டண்ட் பாதிரியார் ஒருவர் ரியோ டி ஜெனிரோவின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மேயராக தேந்தெடுக்கப்பட்ட மார்சிலோ க்ரிவெல்லா

மார்சிலோ க்ரிவெல்லா என்னும் அவர், பெரிய பிராடஸ்டண்ட் தேவாலயத்தை நிறுவியவரின் சகோதரி மகன் ஆவார்; மேலும் அவர் ஒரு பால் உறவையும், ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களையும் முன்னதாக விமர்சித்திருந்தார்.

நகராட்சி தேர்தலின் இரண்டாம் சுற்றில், இடது சாரி கட்சியைச் சேர்ந்த மார்செலோ ஃபிரக்சோவை சுமார் 20 சதவீத வாக்கு வித்தியாசத்தில் அவர் தோற்கடித்துள்ளார்.

பிரேசிலின் இரண்டாவது பெரிய நகரமான ரியோ டி ஜெனிரோவில் அவர் பெற்ற இந்த வெற்றி, அங்கு மத போதக வாக்காளார்களின் செல்வாக்கு அதிகரித்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளது

மேலும் பல ஆண்டுகள் இடதுசாரி தொழிலாளர் கட்சியால் அரசின் ஆட்சிக்குப் பின், வலது சாரிக் கொள்கைகளை நோக்கி மக்கள் நகர்வதையும் இது காட்டுகிறது.