அமெரிக்க தேர்தலும், இந்திய அமெரிக்க உறவுகளும்

அமெரிக்க அதிபராக ஹிலரி கிளிண்டன் அல்லது டொனால்ட் டிரம்ப் யார் வெற்றிபெற்றாலும் இந்தியாவுக்கும் உண்மையிலே, உலக நாடுகளுக்கும் ஏற்படும் பாதிப்பை சிறந்த முறையில் விளக்குகின்ற ஒரே ஒரு அம்சம் எளிதில் அனுமானிக்கக் கூடியதே - அதாவது ஒரு அதிபர் வேட்பாளர் கொள்கை உருவாக்கத்தில் நீண்டகால அனுபவம் உடையவர். இன்னொருவருக்கு இந்த அனுபவமே இல்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலரி கிளிண்டன்

மூன்று தசாப்த காலமாக ஆசியா, அமெரிக்க மையமாக பெண்களின் சுகாதாரம் முதல் பல துறைகளில் கொள்கை பிரச்சனைகளில் பரந்த அளவில் பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர் ஹிலரி கிளிண்டன்,

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கை முனைவுகளில் (அம்சங்களில்) விரிவாக பணியாற்றி, அதிபர் பாராக் ஒபாமா நிர்வாகத்தின்போது, நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் ஹிலரி பயணம் மேற்கொண்டுள்ளார்.

உலக நாடுகளின் தலைவர்களில் பலரையும் அவர் தனிப்பட்ட முறையில் தெரிந்து வைத்திருக்கிறவர்.

படத்தின் காப்புரிமை Getty Images

குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்

வெளிநாட்டு உறவுகளில் டிரம்ப் பெரியளவில் அறியப்படாதவர். வர்த்தகரான இவர், இப்போதுதான் நேட்டோ மற்றும் காஷ்மீர் பிரச்சனை பற்றி தெரிந்து கொண்டு வருகிறார்.

மாற்றத்திற்கான தலைவராக தன்னை காட்டி கொள்வதன் மூலம், உலகை பற்றி அவருடைய அறியாமையை தனக்கு சாதகமாக மாற்றியிருக்கிறார்.

அமெரிக்க அரசியல்-நிர்வாக-ஆட்சி அமைப்பையே ஆட்டங்காண வைக்க விரும்புவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

அவரது இத்தகைய கூற்றுகள் இரு கட்சிகளாலும் ஏமாற்றம் அடைந்துள்ள வாக்காளர்களை ஈர்த்தாலும், அவருடைய அனுபவமின்மையும், ஆராய்ந்து அறியாமல் பேசுவதும், அவருடைய ஆதரவாளர்களுக்கே சுமையாகி இருக்கிறது.

படத்தின் காப்புரிமை Reuters

டிரம்பிடம் முரண்பாடுகள்

இந்தியாவை பொறுத்த வரை டிரம்ப் கட்டுப்படுத்த முடியாதவராக இருப்பார். அவர் இருக்கின்ற மனநிலைக்கு ஏற்ப புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளுக்கான நிலைபாடுகள் மாற்றம் அடையும்.

முதலில், பிற நாடுகளின் விவகாரங்களில் தலையிட விரும்பாமல் அமெரிக்காவின் கூட்டணி அனைத்தையும் பற்றி கேள்வி எழுப்புகின்ற டிரம்பால் ஆசியாவில் அதிகார வெற்றிடம் ஒன்று ஏற்படலாம்.

சீனா போன்ற வலிமையான நாடுகள் இந்த வெற்றிடத்தை நிரம்புவதற்கு இது வழிவகுக்கும். இதனால் இந்தியாவின் நலன்கள் பாதிக்கப்படும்.

இந்திய அமெரிக்கர் தொழில் முனைவர் ஒருவரால் தொடங்கப்பட்ட புதியதொரு குழுவான குடியரசு இந்து கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில், தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தியாவின் சிறந்த நண்பராக இருக்கப் போவதாக டிரம்ப் சமீபத்தில் தெரிவித்திருக்கிறார்.

மதத்தையும், நாட்டின் பெயரையும் குழப்பி, இந்தியாவையும், இந்துவையும் நேசிப்பதாக டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Reuters

இந்திய பத்திரிகையாளர்கள் கருத்து கேட்டபோது, இந்திய பாகிஸ்தான் விவாதத்தில் தன்னை ஈடுபடுத்தி கொள்ள டிரம்ப் மறுத்துவிட்டார்.

மாறாக, இந்திய அரசுக்கு சாபமாக விளங்குகின்ற இந்த பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்யப்போவதாக கூறியுள்ளார்.

இந்தியாவின் நண்பராக இருந்து கொண்டு, காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய முடியாது என்பதால் அவருடைய நிலைப்பாடு சரியாக சிந்தனை செய்யப்படாமல் எடுக்கப்பட்டதாகவே தோன்றுகிறது.

தன்னுடைய பிரசாரத்தின் தொடக்கத்தில் மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான் என்று வர்ணித்த டிரம்ப், பாகிஸ்தானை அடக்குவதற்கு இந்தியாவை ஈடுபடுத்தப் போவதாக குறிப்புணர்த்தி இருந்தார்.

இந்த கூற்று இந்தியாவிலுள்ள சிலரை மகிழ்ச்சி படுத்தி இருந்தாலும், அதனை நம்ப முடியவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

தெற்காசியாவில் பிரபலமான ஹிலரி

இதற்கு மாறாக, ஹிலரி கிளிண்டன் தெற்காசியாவுக்கு பழக்கமானவர்.

அவர் அமெரிக்க வெளியுறவு அமைச்சராக இருந்த கடைசி ஆண்டில் தன்னுடைய கணவரை இந்தியாவில் பயணம் மேற்கொள்ள செய்து நற்பெயரை பெற்றிருக்கிறார்.

செனட் அவை உறுப்பினராக இருந்தபோது, அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய காக்கஸூக்கு தலைமை தாங்கினார்.

பயங்கரவாதிகளை பற்றி குறிப்பிடுகையில், பாகிஸ்தான் அதனுடைய கொல்லைபுறத்தில் பாம்புகளுக்கு புகலிடம் அளித்து வருவதாக தெரிவித்திருந்தார்.

கிழக்கு பகுதி நாடுகள் தொடர்பான கொள்கையை வகுத்து கொண்டு, இந்தியாவை செயல்பட தூண்டிய அதே வேளையில், ஆசிய பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்க வளர்ச்சிக்கு சமநிலையை உருவாக்கும் வகையில் ஆசியா மைய கொள்கையை செயல்படுத்த ஹிலரி முக்கிய பங்காற்றினார்.

இந்திய பெருங்கடலில் அதிகரித்து வந்த சீனாவின் தீவிர நடவடிக்கையாலும், இந்தியாவின் அண்டை நாடுகளை உதவியாலும், உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களலும் வளைத்து போடும் சீனாவின் முயற்சிகளாலும் ஹிலரியின் இந்த கொள்கையை இந்தியா எச்சரிக்கை உணர்வுடன் வரவேற்றது.

படத்தின் காப்புரிமை Reuters

இந்தியா - சீனா பார்வையில் வேறுபாடு

இந்தியாவின் பார்வையில், சீனாவின் அதிகார இடைவெளியால் உருவாகுகின்ற இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு உதவி செய்யும் வகையில் இதே கொள்கையை ஹிலரி தொடரலாம்.

பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான இந்தியா அமெரிக்காவுக்கு மிகவும் நெருக்கமாகி, சீனாவுக்கு சமிக்கை அனுப்பும் கையில், ஆசிய-பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளின் கூட்டு தொலைநோக்கு திட்டத்தை 2015 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளன.

எனவே, ஹிலரியின் வெற்றியை இந்தியா நேர்மறையாக பார்ப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால், சீனா எதிர்மறையான பார்வையை கொள்ளும்.

சீனாவிலுள்ள மனித உரிமைகள் தொடர்பான கவலையை ஹிலரி எழுப்பியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AP

சமீபத்தில் வெளியான விக்கிலீக்ஸ் மின்னஞ்சல்களில், 2013 ஆம் ஆண்டு கோல்டுமன் சாக்ஸ் செயல் அதிகாரிகளுக்கு ஆற்றிய உரையில், தென் சீனக் கடலில் சீனா உரிமை கொண்டாடுவதை அவர் கடுமையாக எதிர்த்து பேசியிருக்கிறார்.

தனக்கு கேந்திர விஷயங்களில் சுயாதீனமான முடிவுகளை எடுக்கும் நிலை இருக்கவேண்டும் என்பதில் இந்தியா கவனமாக இருக்கும் அதே வேளையில், நீண்டகாலமாக இந்தியா எல்லை பிரச்சனையை சந்தித்து வருகின்ற சீனாவுக்கு எதிராக, ஆசியாவில் அமெரிக்கா நிலை கொண்டிருப்பது இந்தியாவுக்கு உதவும்.

அதேபோல, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா படைப்பரிவுகளை திரும்பி அழைத்து கொள்வது, போரால் இன்னலுறும் அந்நாட்டில் இந்தியாவின் பாதுகாப்பையும், அது மேற்கொண்டு வருகின்ற வளர்ச்சி திட்டங்களை பாதிக்கும்.

படத்தின் காப்புரிமை Getty Images

உலக தலைவர்களை பதற்றமடைய வைக்கும் டிரம்ப்

நேட்டோ உள்பட எல்லா அமெரிக்க கூட்டணிகளையும் டிரம்ப் கேள்விக்குட்படுத்தி இருப்பதாலும், அதிபர் ஒபாமாவின் முயற்சிகளை டிரம்ப் தெடருவாரா என்பது தெளிவாக இல்லாததாலும் உலக நாடுகளின் தலைவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

சீனாவுக்கு எதிராக இல்லாமல், பிற நாடுகளின் விவகாரங்களில் தலையிடாமல் டிரம்ப் இருப்பார் என்பதால், சீன அரசியல் ஆய்வாளர்கள் டிரம்புக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.

ஹிலரியின் வெற்றியால் பாதுகாப்பு தொடர்பான அம்சங்களில் இந்தியாவுக்கு பலன்கள் கிடைக்கும். வர்த்தக மற்றும் பொருளாதார கொள்கை பிரச்சனைகளில் இந்தியாவுக்கு கிடைக்கும் பலன்கள் கலவையானதாக அமையும்.

படத்தின் காப்புரிமை AP

வெளிநாடுகளில் வேலை ஒப்படைப்புக்கு எதிர்ப்பு

இரு அதிபர் வேட்பாளர்களும் `அவுட்சோர்சிங்` எனப்படும் வேலைகளை வெளிநாடுகளில் செய்ய ஒப்படைக்கும் திட்டத்திற்கு எதிராக உள்ளனர். இந்த நிலைப்பாடு இந்தியாவின் மென்பொருள் நிறுவனங்களின் முக்கிய பிரச்சனையாக அமையும்.

பல வேலைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டதாக இருவரும் மாறிமாறி குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அமெரிக்க நிறுவனங்கள் உள்நாட்டிலேயே வேலைவாய்ப்புக்களை உருவாக்க வழிசெய்யப்படும் என்று இருவரும் வாக்குறுதி அளித்திருக்கின்றனர்.

``டொனால்ட் டிரம்பின் வணிக சின்ன சட்டையானது சீனாவிலிருந்து வருகிறது, அவரது சூட் மெக்சிகோவிலிருந்து வருகிறது. கோட் இந்தியாவிலிருந்து வருகிறது`` என்று ஹிலரியின் தேர்தல் பிரசார விளம்பரம் கூறுகிறது.

படங்களின் சட்டங்களை விஸ்கான்சினில் செய்யாமல் இந்தியாவில் டிரம்ப் செய்வதாக அவரை கடுமையாக தாக்கி ஹிலரி இன்னொரு உரையில் பேசுவதும் விளம்பரமாக உள்ளது.

ஆனால் உலகமயமாகும் போக்கை ட்ரம்ப் தவிர்க்க முடியாது.

அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஆடைகளில் 97 சதவீதம் பிற நாடுகளில் தயாரிக்கப்படுகின்றன என்று அமெரிக்க ஆடை மற்றும் காலணி கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

நிலைப்பாடுகள் நிலைக்குமா?

வெளிநாடுகளில் வேலைகளை ஒப்படைப்பதற்கு எதிரான தன்னுடைய நிலைப்பாட்டை ஹிலரி கடைபிடிப்பது தெளிவாக இல்லை.

டிரம்பின் தேர்தல் பிரசார விளம்பரத்தில், ஹிலரி 2008 ஆம் ஆண்டு டெல்லியில் தனிப்பட்ட நிகழ்வொன்றில் பேசியதாக கூறப்படும் உரை காட்டப்படுகிறது.

அதற்கு பின்னர், ஒரு மில்லியன் (10 லட்சம்) டாலர் நன்கொடை கிளிண்டன் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

"வெளிநாடுகளில் வேலைகளை ஒப்படைப்பதை உண்மையில் தடுக்க முடியும் என நினைக்கவில்லை. யதார்த்தக்கு எதிரான சட்டமேற்ற வழியில்லை" என்று ஹிலரி அதில் கூறியுள்ளார்.

"இது அமெரிக்காவில் இருக்கும் பலருக்கும் நற்செய்தி" என்று ஆணொருவர் கூறுவதாக ட்ரம்ப்பின் இந்த விளம்பரம் நிறைவு பெறுகிறது. ஹிலரியின் இந்த உரை பல ஆண்டுகளுக்கு முன்னதாக வழங்கப்பட்டதாகும்.

ஆனால், தற்போது அமெரிக்காவில் நிலவுகின்ற பொருளாதா நெருக்கடி மற்றும் வேலையிழப்புக்களால், அமெரிக்காவின் அதிபராக ஹிலரி வேலைகளை வெளிநாடுகளில் ஒப்படைப்பது தொடர்பாக கடும் நிலைப்பாட்டையே எடுப்பார் என்று தோன்றுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

சான்டர்ஸ் ஆதரவு

ஜனநாயக கட்சியிலேயே ஹிலரிக்கு எதிராக போட்டியிட்ட பெர்னி சான்டர்ஸ், வெளிநாடுகளுக்கு வேலைகளை வழங்குவதில் ஆதரவான நிலைப்பாட்டை விமர்சனம் செய்தது, ஹிலரி தன்னுடைய நிலைப்பாட்டை மாற்ற வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகியிருக்கலாம்.

இந்த புதிய காணொளியில் வெளியுறவு செயலாளர் ஹிலரி வெளிநாடுகளில் வேலை ஒப்படைப்பது பற்றி வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நிலைப்பாடுகளை எடுத்துள்ளார் என்று சார்ன்டர்ஸின் பிரசார மேலாளர் ஜெஃப் வீவ்வர் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AFP

எச்1-பி விசா சர்ச்சை

இந்தியாவுக்கான இன்னொரு பெரியதொரு நலன் எச்1-பி விசா விவாதம் பற்றியதாகும். அமெரிக்காவால் வழங்கப்படுகின்ற தற்காலிக வேலைக்கான விசாவான இதனை, இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.

எச்1-பி விசா திட்டம் பல ஆண்டுகளாக சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளனது.

இதனை பயன்படுத்தி இந்திய தொழிலாளர்கள் தகுதியான அமெரிக்கர்களிடம் இருந்து வேலைகளை பிடுங்கிவிடுகின்றனர்.

குறைவான ஊதியத்தில் பணிபுரிய இந்தியர்கள் தயாராக இருப்பதே இதற்கு காரணமாகும் என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டு தொழிலாளர்களுக்குத் தர வேண்டிய ஊதியத்தை உயர்த்துவதன் மூலம், எச்1-பி விசா திட்டத்தையே மீள்வரைவு செய்யப்போவதாக டிரம்பின் இணையதளம் குறிப்பிடுகின்றது.

இது எச்1-பி விசாவுடன் தொழிலாளர்களை ஏற்பதை அமெரிக்க நிறுவனங்களுக்கு அதிக செலவுடையதாக்கும்.

மேலும் அமெரிக்கர்களை மட்டுமே முதலில் வேலைக்கு அமர்த்த வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.

எச்1-பி விசாக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்ற முதல் அதிபர் வேட்பாளர் டிரம்ப் தான்.

படத்தின் காப்புரிமை AFP

அவருடைய வெளிநாட்டு கொள்கை ஆலோசகரும் செனட் அவை உறுப்பினருமான ஜெஃப் செஷன்ஸ் இந்த விசாவை தொழில் நிறுவனங்கள் தவறுதலாக பயன்படுத்தி வருவதாக கூறி வருவதே இதற்கு முக்கிய காரணமாகும் என்கிறார்.

எச்1-பி விசா தொழிலாளர்களையே நம்பியிருக்கும் சிலிக்கான் பள்ளத்தாக்கு நிறுவனங்கள் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்ததை தொடர்ந்து, டிரம்ப் தன்னுடைய நிலைப்பாட்டை மென்மையாக்கியிருக்கிறார்.

திறமைமிக்க குறிப்பாக, அறிவியிலில் உயர் பட்டம் பெற்ற வெளிநாட்டவரை அனுமதிக்க சரத்துக்கள் வேண்டும் என்று அவர் பின்னர் தெரிவித்திருக்கிறார்.

எச்1-பி விசா திட்டம் பற்றி பெரிய அளவில் ஹிலரி பேசாமல் இருந்தாலும், தங்களுடைய வேலை பறிபோவதற்கு முன்னதாக எச்1-பி விசா பெற்ற தொழிலாளர்களுக்கு அனைத்தையும் பயிற்சி அளிக்கும் அமெரிக்கரை நினைத்தால் இதயம் வேதனைப்படுகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

நியூயார்க்கிலிருந்து செனட் அவை உறுப்பினராக இருந்து பல மென்பொருள் நிறுவனங்களோடு தொடர்பு கொண்டிருப்பதால் இந்த பிரச்சனையில் அனுதாபத்தோடு கூடிய புரிதலை அவர் கொண்டிருக்கிறார்.

சட்டப்பூர்வமற்ற குடிவரவு மற்றும் மன்னிப்பு அளிக்கும் பிரச்சனைகளை கையாளுகின்ற விரிவான குடியேற்ற சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக எச்1-பி விசா திட்டத்தில் மாற்றங்களை ஹிலரி கொண்டுவருவார்.

படத்தின் காப்புரிமை Getty Images

தொடரும் கடும் போக்குகள்.....

அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு போன்ற பிற பொருளாதார மற்றும் வர்த்தக கொள்கை விடயங்களில், ஒபாமா நிர்வாகத்தை போல இரு அதிபர் வேட்பாளாகளும் கடுமையாகவே இருப்பர்.

இந்தியாவின் காப்புரிமை சட்டங்களில் முக்கிய மாற்றங்களை அமெரிக்க மருந்து நிறுவனங்கள் விரும்புவது இந்தியாவின் பொதுவான நிறுவனங்களை பாதிக்கும்.

இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் அரசானது பல முயற்சிகளை இது தொடர்பாக எடுத்துள்ள போதிலும், வர்த்தகம், வர்த்தக கட்டுப்பாட்டு கொள்கைகள், வெளிநாட்டு நேரடி முதலீட்டில் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை எளிதாக்குவது தொடர்பாக, அமெரிக்காவின் ஜனநாயக மற்றும் குடியரசு கட்சியினர் நீண்ட பட்டியலையே கொண்டுள்ளனர்.

ஆனால், இவை அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக சொல்லப்படுகின்றன. அமெரிக்க அதிகாரிகள் அவ்வப்போது அதனையே இந்தியாவிடம் சொல்கின்றனர். இது மாறப்போவதில்லை

தொடர்புடைய தலைப்புகள்