பாக்., அரசாங்கத்தை எதிர்த்து பிரம்மாண்ட பேரணிக்கு தலைமைத்தாங்க இம்ரான் கானுக்கு தடை

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்தில் வரும் புதன்கிழமையன்று, நகர மையத்தில் அந்நாட்டு அரசுக்கு எதிரான பிரம்மாண்ட பேரணி ஒன்றுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய அரசியல்வாதியுமான இம்ரான் கான் தலைமைத்தாங்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்லாமபாத்தில் உள்ள ஒரு நீதிமன்றம் அதனை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய அரசியல்வாதியுமான இம்ரான் கான்

இம்ரான் கான் பூங்கா ஒன்றை பயன்படுத்த வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இம்ரான் கான் வீட்டிற்கு அருகே இருந்த டஜன் கணக்கான கட்சித் தொண்டர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, புறநகர் பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டில் ஏறக்குறைய வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கான் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் ஊழல்களை வெளிப்படுத்த விரும்புவதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

ஆனால், அவருடைய எதிர் அணியினர், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களுடன் முறுகல் நிலையைக் கொண்டிருக்கும் , சக்தி வாய்ந்த ராணுவத்திற்கு இம்ரான் கான் உதவி செய்து வருவதாக குற்றஞ்சாட்டி உள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்