சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட 33 பணியாளர்களை மீட்க தீவிர முயற்சி

தென் மேற்கு சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, நிலத்துக்கு அடியில் சிக்கியுள்ள 33 பணியாளர்களை மீட்கும் முயற்சியில் மீட்புதவி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

நிலத்துக்கு கிழே சிக்கியிருந்த மேலும் இருவர் பத்திரமாக மேலே கொண்டுவரப்பட்டுள்ளனர்.

வெடிப்புக்கு காரணம் என்ன என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை.

சமீப ஆண்டுகளில், சீனாவில் பணியிடங்களில் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ள போதும், அங்குள்ள சுரங்கங்களில் பாதுகாப்பு அம்சங்கள் என்பது மோசமாகவே உள்ளன.

தொடர்புடைய தலைப்புகள்