மொசூல் நகரின் புறநகர் பகுதிக்கு மிக அருகே இராக் அரசின் சிறப்பு படை

இராக்கில் ஐ.எஸ் குழுவினரை எதிர்த்து சண்டையிட்டு வரும் அந்நாட்டின் சிறப்பு படைப்பிரிவினர் மொசூல் நகரை நோக்கி முன்னேறும் நடவடிக்கையை மீண்டும் தொடங்கியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மொசூல் நகரின் புறநகர் பகுதிக்கு மிக அருகே இராக் அரசின் சிறப்பு படை

இந்த படையினர் கார் குண்டு தாக்குதல்களை எதிர் கொண்டனர். மேலும், மோர்ட்டார் தாக்குதல்களுக்கும், சிறிய ஆயுதங்களின் துப்பாக்கிச்சூடு தாக்குதல்களுக்கும் உள்ளானர்கள்.

ஆனால், அதை அனைத்தையும் மீறி பஸ்வாயா என்ற கிராமத்தை படையினர் அடைந்துள்ளனர்.

அக்கிராமத்தில் இராக் கொடியை ஏற்றி உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இராக் சிறப்பு படைப்பிரிவினரின் இந்த முன்னேற்றம் மொசூலின் புறநகர் பகுதியை அடைய இன்னும் சில கிலோ மீட்டர்களே அவர்களுக்கு உள்ளன.

ஐ.எஸ் வசமுள்ள உள்ள இராக்கின் கடைசி முக்கிய நகரம்தான் மொசூல்.

தொடர்புடைய தலைப்புகள்