தென் ஆஃப்ரிக்கா ஆளும் கட்சியில் ஓய்ந்தது சர்ச்சை; நிதித்துறை அமைச்சர் மீதான மோசடி கைவிட அரசு முடிவு

தென் ஆஃப்ரிக்காவின் நிதித்துறை அமைச்சர் பிரவின் கோர்தனுக்கு எதிரான மோசடி குற்றச்சாட்டுக்களை கைவிடுவதாக அந்நாட்டு அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தென் ஆஃப்ரிக்காவின் நிதித்துறை அமைச்சர் பிரவின் கோர்தன்

சர்வதேச நிதி வட்டாரங்களில் மதிக்கப்படுபவரான பிரவின் கோர்தன், தன்னுடைய சகா ஒருவருக்கு ஓய்வூதிய திட்டம் ஒன்றை வழங்குவதில் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த விவகாரத்தில், கோர்தன் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட எண்ணவில்லை என்று தான் முடிவுக்கு வருவதாக வழக்கறிஞர் ஷான் ஆப்ரஹாம்ஸ் தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிதி அமைச்சர், தனக்கு எதிரான இந்த வழக்கு அரசியல் நோக்கம் கொண்டது என்று தெரிவித்துள்ளார்.

ஆளும் ஆஃப்ரிக்க தேசிய காங்கிரஸில் உள்ள முன்னணி பிரபலங்கள் இடையே ஏற்பட்ட தொடர் மோதல்களை அடுத்து இந்த வழக்கு பதியப்பட்டது.

தொடர்புடைய தலைப்புகள்