ஸ்பெயினில் நடைபாதையில் மலம் கழிக்கும் நாய்களின் உரிமையாளர்களை கண்டுபிடிக்க டிஎன்ஏ சோதனை

ஸ்பெயினின் கிழக்கு பகுதியில் இருக்கும் வாலென்ஷியா நகரின் பகுதி ஒன்றில், தங்களின் நாய்களை நடைபாதைகளில்மலம் கழிக்க வைக்கும் உரிமையாளார்களை கண்டுப்பிடிக்கும் நோக்கில் நாய்களின் டிஎன்ஏ தகவல்களை சேகரிக்க தொடங்கவுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

நாய்களின் கழிவை ஆய்வு செய்வதற்காக துப்புறவு பணியாளர்களால் அது சோதனைக் கூடத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்று மிஸ்லடாவில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டிஎன் ஏ வை பதிவு செய்ய கால்நடை மருத்துவரிடம் தங்களின் நாய்களை அழைத்துச் செல்ல வேண்டும்; அப்படி செய்ய தவறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

ஜனவரி மாதத்திலிருந்து தங்கள் நாய்கள் மலம் கழித்து அதை சுத்தம் செய்யாதவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.