பிரான்சின் கலே முகாமிலிருந்து ஆதரவற்ற குழந்தைகள் வேறு முகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர்

ஜங்கிள் என்ற புலம் பெயர்ந்தவர்களுக்கான முகாமில் தற்போதும் தங்கியுள்ள நூற்றுக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகளை பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள், பிரான்சில் உள்ள புதிய மையங்களுக்கு இன்று கூட்டிச் செல்கின்றனர்.

படத்தின் காப்புரிமை AFP/Getty

பிரிட்டனுக்குப் பயணம் செய்வதற்கான நம்பிக்கையுடன் அந்த முகாமில் கப்பல் கொள்கலன்களைத் தற்காலிக இருப்பிடமாகக் கொண்டு சுமார் 1,500 இளைஞர்கள் வாழ்ந்துவந்தனர்.

அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஆவணங்களில், இனிமேல் ஐக்கிய ராஜ்யத்திற்கு மாறிச் செல்வதற்கான மனுக்கள் எதுவும் கலேயில் கையாளப்படாது என்று கூறப்பட்டுள்ளது .

செவ்வாயன்று இரவு நேரத்தில், பதின்ம வயதில் உள்ள எரித்திரியா நாட்டைச் சேர்ந்த கிறிஸ்துவர்கள் மற்றும் ஆப்கான் முஸ்லீம்களுக்கு இடையே சண்டை நடந்த போது, அந்த முகாமிற்கு கலவரத் தடுப்பு போலிசார் அழைக்கப்பட்டனர்.

இந்தப் பிரச்சனையில், சுமார் 100 இளைஞர்கள் ஈடுபட்டுள்ளதாக போலிஸார் தெரிவித்தனர்.

டஜன் கணக்கான எரித்திரியா நாட்டைச் சேர்ந்தவர்கள், பாதுகாப்பிற்காகத் தற்காலிக தேவாலயத்தில் தங்கியுள்ளனர்.