மத்திய இத்தாலியில் 4.8 அளவில் மீண்டும் நில நடுக்கம்

கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஒன்று இத்தாலியை தாக்கிய நிலையில், அதற்கு மூன்று நாள் கழித்து மத்திய இத்தாலியில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மத்திய இத்தாலியில் 4.8 அளவில் மீண்டும் நில நடுக்கம்

ஆனால், இந்த நில நடுக்கம் குறைந்த ஆற்றல் உடையது.

அமெரிக்காவின் நிலவியல் ஆய்வு நிறுவனம் இந்த நில நடுக்கத்தின் அளவை 4.8 என்று கண்டறிந்துள்ளனர்.

இந்த நில நடுக்கத்தால் கணிசமான சேதங்கள் ஏற்பட்டனவா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் இல்லை.

மத்திய இத்தாலியின் பெருகியா நகரில் உள்ள மலைப்பிரேதேச கிராமமான பெய்வே டோரினாவுக்கு மிக அருகில் நில நடுக்கத்தின் மையப்புள்ளி அமைந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நான்கு நில நடுக்கங்கள் ஏற்பட்டதை தொடர்ந்து பெருகியா நகரிலிருந்து பொதுமக்கள் பலரும் வெளியேறியுள்ளனர்.

நான்கு நில நடுக்கங்கள் ஏற்பட்டதை தொடர்ந்து பெருகியா நகரிலிருந்து பொதுமக்கள் பலரும் வெளியேறியுள்ளனர்.

அந்த வரிசையில், கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட முதல் நில நடுக்கத்தில் சுமார் 300க்கும் அதிகமான பேர் பலியானார்கள்

தொடர்புடைய தலைப்புகள்