மொசூல் போரில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது: ஐ.எஸ் குழுவின் தலைவர்

ஐ.எஸ் குழுவின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதியின் குரல் செய்தி என்று கூறப்படும் ஒலி நாடா ஒன்றை அக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption அபு பக்கர் அல் பக்தாதி

அந்த செய்தியில், மொசூல் நகரை பாதுகாக்கும்படி பொதுமக்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், இந்தப் போரிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்றும், வெற்றி பெறுவோம் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஓராண்டில், அவரிடமிருந்து வரும் முதல் செய்தி இதுவாகும்.

அதுவும் இராக்கில் ஐ.எஸ் பிடியில் உள்ள கடைசி நகரான மொசூலில் இருந்து ஜிஹாதிகளை வெளியேற்ற இரு வாரங்களாக இராக் தீவிர தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த குரல் செய்தி வெளியாகி உள்ளது.

ஐ.எஸ் குழுவிற்கு ஆதரவு தெரிவித்ததாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் ஆண்கள் மற்றும் சிறுவர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளில், ஐ.எஸ் குழுவுக்கு எதிரான போரில் ஈடுபட்டுவரும் சுன்னி தீவிரவாத குழுக்கள் ஈடுபட்டு வருவதாக மனித உரிமைகள் குழுவான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்