பாகிஸ்தானில் ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: 12 பேர் பலி

பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் இரண்டு விரைவு ரயில்கள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில், குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், இந்த விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Google
Image caption பாகிஸ்தானில் ரயில் விபத்து

கராச்சி நகரின் லாண்டி ரயில்வே நிலையத்துக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

தவறான ரயில் சமிக்ஞை தரப்பட்டதால், இந்த இரண்டு விரைவு ரயில்களும் ஒன்றோடொன்று மோதி விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விபத்துக்குள்ளான ரயில்களில் இரண்டு பெட்டிகள் தலைகீழாக கவிழ்ந்துள்ளன.

இடிபாடுகளில் சிக்கிக் கொண்டு, மேலும் பலர் பலியாகி இருக்கலாம் என்று சம்பவ இடத்தில் உள்ள மீட்பு பணியாளர்கள் அஞ்சுகின்றனர்.

உள்ளூர் மருத்துவமனைகளுக்கு காயமடைந்தவர்கள் எடுத்துச் செல்லப்பட்டனர்.

தொடர்புடைய தலைப்புகள்