அமெரிக்க தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது? அதன் நடைமுறைகள் என்ன?

2017 ஆம் ஆண்டு ஜனவரியில், உலகின் மிக சக்திவாய்ந்த நாடு ஒரு புதிய தலைவரை பெற்றிருக்கும்- ஆனால் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நடைமுறைகள் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது ?

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்கா அதன் அதிபரை தேர்ந்தெடுக்கும் போது வெறும் நாட்டின் தலைவரை மட்டுமல்ல ஒரு மிகப்பெரிய அரசாங்கத்தின் தலைவரையும், இந்த உலகத்தில் இருக்கும் மிகப்பெரிய ராணுவத்தின் தளபதியையும் தேர்ந்தெடுக்கின்றது.

எனவே அது ஒரு முக்கிய பொறுப்பு. அது எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம்.

அதிபராக தகுதி பெற்றவர்கள் யார்?

அமெரிக்காவின் அதிபராவதற்கு நீங்கள் "இயற்கையான முறையில்" அதாவது அமெரிக்காவில் பிறந்த அமெரிக்கக் குடிமகனாக இருக்க வேண்டும், குறைந்தது 35 வயதை கடந்திருக்க வேண்டும், மேலும் அங்கு 14 ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும்.

படத்தின் காப்புரிமை Getty Images

1933 ஆம் ஆண்டிலிருந்து அதிபராக இருந்த ஏறக்குறைய ஒவ்வொருவரும், ஆளுநராகவோ, செனெட்டராகவோ, ஐந்து நட்சத்திர ராணுவ தளபதியாகவோ இருந்துள்ளனர்.

கட்சியின் அதிபர் வேட்பாளராக நியமனமாவதற்கு முன் அல்லது ஊடகங்களின் கவனத்தை பெறுவதற்கும் முன் இந்த பதவிகளில் ஒன்றை வகித்திருந்திருக்கிறார்கள்.

அதிபர் தேர்தலின் வேட்பாளாராக குடியரசுக் கட்சியிலிருந்து ஒருவரும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் நியமிக்கப்படுவர்.

ஏன் ஹிலரியும் டொனால்ட் ட்ரம்பும்?

இரண்டு கட்சியிலும் அதிகாரபூர்வ அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒவ்வொரு மாநிலத்திலும், கடல் கடந்த அமெரிக்கப் பிராந்தியங்களிலும் தொடர் தேர்தல்கள் நடத்தப்படும்; அந்த தேர்தல்கள் பிப்ரவரி மாதத்தில் தொடங்கும்.

ஒவ்வொரு மாநிலங்களிலும் வெற்றி பெறுபவர்கள், வேட்பாளார்கள் இறுதியாக தீர்மானிக்கப்படும், ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் கட்சி மாநாட்டில், வாக்களிக்க அதிகாரம் பெற்ற கட்சி உறுப்பினர்களை தங்களுக்கு ஆதரவாக பெறுவார்கள்.

அதிகப்படியான மாநிலத்தில் வெற்றி பெற்றால், இறுதி மாநாட்டில் அதிகப்படியான உறுப்பினர்களை அவர்களுக்கு ஆதரவாக பெறுவார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images

2016 ஆம் ஆண்டில் ஜனநாயக கட்சியில் ஹிலரி கிளிண்டனும், குடியரசுக் கட்சியில் டொனால்ட் ட்ரம்பும் தான் அதிபர் வேட்பாளர்களாக வெற்றி பெற்றனர் மேலும் அவர்கள் அக்கட்சிகளின் அதிகாரபூர்வ வேட்பாளராக நியமிக்கப்பட்டனர்.

நவீன அமெரிக்க வரலாற்றில் மிகவும் செல்வாக்கற்ற இரண்டு அமெரிக்க அதிபர்கள் இவர்கள்தாம்.

வர்ஜீனியாவின் செனெட்டர், டிம் கெயினை ஹிலரியின் துணை அதிபர் வேட்பாளர்களாகவும், இந்தியானாவின் ஆளுனர் மைக் பென்ஸைக் குடியரசுக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர்களாகவும், இரண்டு கட்சிகளும் தங்களின் கட்சி மாநாடுகளில் அறிவித்திருந்தனர்.

நவம்பரில் நடைபெறவிருக்கும் வாக்குபதிவு எவ்வாறு நடைபெறும்?

ஒவ்வொரு மாநிலத்திலும் அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்கள் அந்த மாநிலம் ஆதரவு தரும் அதிபர் வேட்பாளராக மாறுவார்.

538 உறுப்பினர்களை கொண்ட வெற்றியாளார்களை தீர்மானிக்கும் அமைப்பு, ’’தேர்தல் அவை’’ எனப்படும் ஆனால் அதில் அதிபரை தேர்ந்தெடுக்க 270 பேர் போதும்.

ஆனால் ஒவ்வொரு மாநிலமும் சமமானது அல்ல எடுத்துக்காட்டாக கலிஃபோர்னியாவில், கனெக்டிகட் என்னும் மாநிலத்தை காட்டிலும் 10 மடங்கு மக்கள் தொகை அதிகம் எனவே அது இரண்டும் சமமான நிலையை பெறாது.

படத்தின் காப்புரிமை Getty Images

சமீபத்தில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி ஒவ்வொரு மாநிலமும் இம்மாதிரியான வாக்காளர்களை தேர்ந்தெடுக்கும் நபர்களை கொண்டிருக்கும் ; எனவே மாநிலங்களுக்கிடையே அந்த எண்ணிக்கை மாறுபடும்.

மக்கள் நேரடியாக வாக்களித்து அதிபரை தேர்வு செய்வதில்லை அவர்கள் அதிபரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கும் நபர்களையே தேர்வு செய்கின்றனர்.

இங்கு தான் இது சுவாரஸ்யமானதாக மாறுகிறது!

நெப்ராஸ்கா மற்றும் மேயின் ஆகிய மாகாணங்களை தவிர, மற்ற எல்லா மாநிலங்களிலும், வெற்றி பெறும் நபர் அந்த மாநிலத்தின் அனைத்து வாக்களிக்கும் உரிமை பெற்ற நபர்களையும் பெறுகிறார் .

எடுத்துக்காட்டாக நியூயார்க்கில் வெற்றிபெறுபவர் அந்த மாநிலத்தின் அனைத்து 29 வாக்களிக்கும் உரிமை பெற்றவர்களையும் பெறுகிறார்.

ஆனால், வெற்றிபெற தேவையான 270 வாக்குகளை பெற , ஊசலாடும் மாநிலங்கள்தான் ( Swing states) அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

ஆகையால் இந்த ஊசலாடும் மாநிலங்கள் என்றால் என்ன?

இரண்டு வேட்பாளர்களும் 270 வாக்காளர்களைப் பெற ஒரே சமயத்தில் அனைத்து மாநிலங்களிலும் வெற்றிபெற வேண்டும்.

இரண்டு கட்சிகளுமே சிறிய எண்ணிக்கையிலோ அல்லது பெரிய எண்ணிக்கையிலோ வாக்குகளை பெறுவர்.

குடியரசுக் கட்சிக்கு டெக்ஸாஸில் அதிக செல்வாக்கு உள்ளது எனவே அவர்கள் அங்கு அதிக பணம் செலவு செய்து பிரச்சாரம் செய்து பணத்தை வீணடிப்பதில்லை.

அது போல ஜனநாயக கட்சிக்கு கலிஃபோர்னியா மாகாணத்தில் செல்வாக்கு அதிகம்.

படத்தின் காப்புரிமை Getty Images

பிற மாநிலங்கள் நிலைமாறும் மாநிலமாகவே உள்ளன. எனவே அங்கெல்லாம், எப்படி வேண்டுமென்றாலும் முடிவு மாறும்.

குறிப்பாக தேர்தல் அவையில், 29 வாக்குகளைக் கொண்ட ஃபுளோரிடா மாகாணம் 2000 ஆம் ஆண்டில் ஜார்ஜ் புஷ்ஷிற்கு ஆதரவாக அமைந்தது. தேசிய அளவில் ஒட்டுமொத்த வாக்குகளில் அவர் வெற்றிபெறவில்லை என்றாலும், உச்சநீதி மன்றத்தில் நடைபெற்ற வழக்கை அடுத்து அவர் தேர்தல் அவை அமைப்பில் வெற்றிபெற்றார்.

ஓஹையோ, வர்ஜீனியா, கொலரோடோ, வடக்கு கரோலினா மற்றும் நெவாடா ஆகியவை பிற "நிலைமாறும்" மாநிலங்கள் ஆகும்.

புதிய அதிபர் எப்போதிலிருந்து பணியாற்றத் தொடங்குவார்?

முடிவு தெளிவானதாக இருந்தால், வெற்றி பெற்ற வேட்பாளர், அமைச்சரவையை உருவாக்குவார் மற்றும் ஒரு முழுமையான கொள்கை திட்டத்தைத் தயாரிக்கத் தொடங்குவார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இதற்கிடையில் பதவிக்காலம் முடிந்த "செயல்படாத அதிபர்" தான் தனது பதவிக்காலம் மூலம் விட்டுச்செல்லும் சாதனைகளை வடிவமைப்பதிலும், பொதுவாக வெள்ளை மாளிகையிலிருந்து தனது உடைமைகளை எடுத்துச் செல்வதிலும், காலத்தை செலவழிப்பார்.

அமெரிக்க அரசியல் அமைப்பின்படி தேர்தலை அடுத்து வரும் ஆண்டின் ஜனவரி மாதம் 20ம் தேதி, வெற்றி பெற்றவர் அதிபராக பதவியேற்பார்.