ஒபாமா வெல்ல உதவிய ஃப்ளோரிடா மாநிலம் ஹிலரிக்கு உதவுமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஒபாமா வெல்ல உதவிய ஃப்ளோரிடா மாநிலம் ஹிலரிக்கு உதவுமா?

ஹிலரி கிளிண்டனுக்கு ஆதரவாக கருப்பின வாக்காளர்கள் அணி திரளவேண்டுமென அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கோரியுள்ளார்.

ஆப்ரிக்க அமெரிக்க வாக்காளர்கள் தேவையான அளவு ஒன்று திரளவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

2012 ஆம் ஆண்டின் வாக்களிப்பு விவரங்களை இதுவரையிலான வாக்கெடுப்பின் புள்ளிவிவரங்களோடு ஒப்பிடும்போது ஆப்ரிக்க அமெரிக்க வாக்காளர்களை உற்சாகமூட்டி அணி திரட்டுவதில் ஜனநாயக கட்சியினர் சிரமப்படுவதாக தெரிகிறது.

அவர்களின் வாக்குகள் கூடுதலாக தேவைப்படும் மாநிலம் ஃப்ளோரிடா.

இம்மாநிலம் தேர்தல் முடிவை நிர்ணயிக்கவல்லதாக பார்க்கப்படுகிறது.

ஃப்ளோரிடாவிலிருந்து பிபிசியின் பிரத்யேக செய்திக்குறிப்பு.