வியட்நாம் அரசை விமர்சித்த வலைப்பதிவர் கைது

வியட்நாம் அரசை விமர்சனம் செய்யும் வகையில் செய்திகள் பதிவிட்டதை அடுத்து ஒரு பிரபலமான வலைப்பதிவரை வியட்நாம் போலிசார் கைது செய்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஹோச்சிமின் நகரத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள ஹோ வான் ஹாய் ஒரு மருத்துவரும் ஆவர்.

சிறிது நேரத்திற்குப் பிறகு அவரது வலைப்பக்கத்தை அணுக முடியவில்லை.

வியட்நாமில் உள்ள ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக வெளிப்படையாக விமர்சனம் செய்யும் எழுத்தாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மீது எடுக்கப்படும் கடும் நடவடிக்கையில் சமீபமாக கைது செய்யப்பட்டவர் தான் மருத்துவர் ஹாய்.

சுயாதீனமான ஊடக செய்திகளை தடை செய்யும் சட்டத்தை மீறியதை அடுத்து, டஜன் கணக்கான கருத்து மாறுபடுபவர்கள் வியட்நாமில் நீண்ட சிறைவாசத்தை அனுபவித்து வருகின்றனர்.