துருக்கியில் குர்து ஆதரவு கட்சியின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது

குர்து இனத்திற்கு ஆதரவான ஹச்டிபி கட்சியின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்களை துருக்கிய ஆட்சியாளர்கள் கைது செய்திருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை AP/Reuters
Image caption நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது வழக்கு தொடுக்கப்படுவதற்கு இருந்த வந்த சட்டப்பூர்வ விதிவிலக்கை, இந்த ஆண்டு தொடக்கத்தில் கொண்டு வந்த அரசியல் சாசன சீர்திருத்தம் மாற்றிவிட்டது

தீவிரவாத தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சலஹாடீன் டெமிர்டாஸ் மற்றும் ஃபிஜின் யுக்செக்டாக்கின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்று போலிசார் கூறுகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டப்பூர்வமற்ற முறையில் கடத்தப்பட்டிருப்பதாக சக நாடாளுமன்ற உறுப்பினர் எர்டுகுருல் குர்க்சு பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டப்பூர்வமற்ற முறையில் கடத்தப்பட்டுள்ளனர் - நாடாளுமன்ற உறுப்பினர் எர்டுகுருல் குர்க்சு

முகநூல் மற்றும் டுவிட்டர் சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக இஸ்தான்புல்லில் இருக்கும் செய்தியாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.

சட்டபூர்வமற்ற வகையில் இயங்கிவரும் குர்து இன ஆயுதப்படையான பிகேகேயுடன் தொடர்பு கொண்டிருப்பதாக ஹச்டிபி கட்சியை முன்னதாக துருக்கிய அரசு குற்றஞ்சாட்டியிருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருந்து வந்த வழக்கு தொடுக்கப்படுவதில் இருந்து தரப்பட்டு இருந்த சட்டப்பூர்வ விதிவிலக்கை அகற்றிவிடும் சர்ச்சைக்குரிய அரசியல் சட்டத் திருத்தத்தை அதிபர் ரசெப் தாயிப் எர்துவான் இவ்வாண்டு தொடக்கத்தில் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய தலைப்புகள்