சிக்கன நடவடிக்கையை வலியுறுத்தும் எகிப்து பிரதமர்

எகிப்து நாட்டின் நாணய மதிப்பு சரிவு மற்றும் எரிபொருள் விலை அதிகரித்தது ஆகியவை ஏற்பட்ட அடுத்த நாள், சிக்கன நடவடிக்கைள் கொண்டுவருவதை அந் நாட்டின் பிரதமர் நியாயப்படுத்தியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

கெய்ரோவில் பேசிய எகிப்திய பிரதமர் ஷெரிப் இஸ்மாயில், அரசு பணத்தை திரட்ட முயற்சி செய்து வருவதாகவும், பொருளாதார சீர்திருத்தங்களை தள்ளிப்போட முடியாது என்றும் தெரிவித்தார்.

வியாழனன்று எகிப்திய நாட்டின் மத்திய வங்கி, நாணயமான பவுண்டின் மதிப்பை 48 சதவீத அளவிற்குக் குறைத்தது.

எரிபொருள் மானியங்கள் நிறுத்தப்பட்டன மற்றும் பெட்ரோல் விலை 30 முதல் 46 சதவீதத்திற்கு இடையே அதிகரித்தது.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 12 மில்லியன் டாலர் கடனை பெறுவதற்கான நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.