துப்பாக்கிச் சண்டையில் இரண்டு அமெரிக்க ராணுவ பயிற்சியாளர்கள் ஜோர்டானில் பலி

இரண்டு அமெரிக்க ராணுவ பயிற்சியாளர்கள், துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டுள்ளனர் என ஜோர்டானில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜோர்டோனிய ராணுவத்துடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க ராணுவத்தினர் (கோப்புப்படம்)

அந்தப் பயிற்சியாளர்கள், விமானப் படைத் தளத்தின் வாயிலில் கொல்லப்பட்டதாக ஜோர்டானிய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்தத் தகவல்கள் தற்போது தெளிவாக இல்லை. ஆனால், ஜோர்டானிய ராணுவம், அமெரிக்க பயிற்சியாளர்களுடன் சென்ற வாகனத்தை நிறுத்துமாறு கூறியபோதும் நிறுத்ததாத காரணத்தால், துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது எனக் கூறியது.

மற்றொரு அமெரிக்க மற்றும் ஜோர்டானிய அதிகாரியும் காயமடைந்ததாக கூறப்படுகிறது.