கிளர்ச்சிப் படை பிரமுகரை கென்யாவிலிருந்து நாடு கடத்தும் நடவடிக்கைக்கு கண்டனம்

தெற்கு சூடானின் கிளர்ச்சி படையின் தலைவர் ரெய்க் மச்சாரின் செய்தி தொடர்பாளர் ஜேம்ஸ் கேடட் டாகின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என கூறி, அவரை கென்யாவில் இருந்து நாடு கடத்தப்படும் நடவடிக்கைக்கு மனித உரிமை குழுக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜேம்ஸ் கேடட் டாக் (கோப்புப்படம்)

ஐ.நா.சபையின் அமைதிகாப்பு பணிக்கான கென்யாவின் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை பேஸ்புக்கில் ஆதரித்து கருத்து தெரிவித்ததை அடுத்து , ஜேம்ஸ் கேடட் டாக் நைரோபியில் கைது செய்யப்பட்டார்.

டாக் தெற்கு சூடனின் தலைநகர் ஜூபாவில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார் என கிளிர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கென்யாவின் ஐ.நா. தளபதியைப் பதவி நீக்கம் செய்ததற்கு கென்யா சீற்றத்துடன் பதில் அளித்துள்ளது.

கென்யா தனது 1,000 அமைதி காப்பாளர்களை திரும்பப் பெற்றுக்கொள்ளப் போவதாகவும், தெற்கு சூடானின் அமைதிகாப்பு நடவடிக்கைகளில் இனிமேல் பங்கேற்க போவதில்லை எனவும் கூறியுள்ளது.