அலெப்போவில்  ரஷ்யாவின் போர்நிறுத்தத்தை நிராகரித்த கிளர்ச்சிக்காரர்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அலெப்போவில் ரஷ்யாவின் போர்நிறுத்தத்தை நிராகரித்த கிளர்ச்சிக்காரர்கள்

சிரியாவின் கிளர்ச்சிக்காரர்கள் அலெப்போ நகரில் இருந்து வெளியேறுவதற்கு ரஷ்யா வெள்ளிக்கிழமை மாலை வரை கால அவகாசம் வழங்கியுள்ளது.

தமது வான் தாக்குதல்களுக்கு ஒரு மனித நேய இடைநிறுத்தத்தை செய்துள்ளதாக கூறும் அது, அவர்கள் அதற்கு முன்னதாக பாதுகாப்பாக வெளியேற முடியும் என்றும் கூறியுள்ளது.

ஆனால், அதனை நிராகரித்துள்ள கிளர்ச்சிக்காரர்கள் கிழக்கு பகுதியில் கடுமையான ஷெல் தாக்குதல்கள் மூலம் அரசாங்க முற்றுகையை முறியடிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.