அமெரிக்க அதிபர் தேர்தல்: கடைசி வார இறுதியில் ஹிலரி, டிரம்ப் அனல் பறக்கும் பிரசாரம்

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்திற்கான கடைசி வார இறுதியில் தங்களுடைய போட்டி பிரசாரங்களை ஹிலரி கிளிண்டனும், டொனால்ட் டிரம்பும் அமெரிக்கா முழுவதும் செய்யவுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption அமெரிக்க அதிபராக வருவார் என்று எதிர்பார்க்கப்படும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரின் முன்னிலை இடைவெளி குறைந்து வருகிறது

ஃப்லோரிடாவில் பயணம் மேற்கொள்ளும் ஹிலரி, கடந்த எட்டு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றங்களை மீண்டும் கோடிட்டுக்காட்டுவார் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு மாறாக, டொனால்ட் டிரம்பின் அரசியல் பேச்சானது, ஊழல் மிகுந்த வாஷிங்டன் மேல் வர்க்கத்தினர் குறிப்பாக, ஹிலரி, என்று அவர் கூறுவோரைக் கண்டிப்பதாவும், மாற்றத்திற்கும், சீர்திருத்தத்திற்கும் உறுதிமொழி அளிப்பதாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த அமெரிக்க அதிபராக வருவார் என்று எதிர்பார்க்கப்படும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரே இன்னும் முன்னிலையில் இருப்பதாக, சமீபத்திய கருத்துக்கணிப்புக்கள் தெரிவித்தாலும், அவருடைய முன்னிலை இடைவெளி குறைந்து வருகிறது.

முன்னேற்றத்தின் உத்வேகம் தன்னிடம் இருப்பதாக தெரிவித்திருக்கும் டிரம்ப், அதனை பராமரித்து கொள்ள மூன்று முக்கிய மாநிலங்களான ஃப்லோரிடா, வட கரோலைனா மற்றும் நெவாடாவில் சனிக்கிழமை பயணம் மேற்கொள்ள இருக்கிறார்,