ட்ரம்பின் மனைவி சட்டவிரோதமாக பணியாற்றியதற்கான ஆவணங்கள்?

ஸ்லோவேனியாவில் பிறந்த ட்ரம்பின் மனைவி மெலானியா, அமெரிக்காவுக்கு முதலில் வந்தபோது, சட்ட விதிகளுக்குப் புறம்பாக பணியாற்றினார் என்பதை உறுதிப்படுத்தும்ஆவணங்கள் தங்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக அசோஷியேட்ட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption குற்றப் பின்னணி உடையவர்களை நாடு கடத்தப் போவதாக ட்ரம்ப் உறுதிமொழி

1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா வந்த இந்த முன்னாள் மாடல் அழகிக்கு அக்டோபரில் தான், அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அவருடைய பணி உரிமம் தொடர்பான நடைமுறைகள் முடிவடைவதற்கு முன்னரே 10 மாடல் அழகி பணிக்காக, அவருக்கு 20 ஆயிரம் டாலர் வழங்கப்பட்டுள்ளதை இந்த ஆவணங்கள் காட்டுகின்றன.

அமெரிக்க தேர்தல் பிரசாரத்தின்போது, சட்டப்பூர்வமற்ற குடியேறிகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார் ட்ரம்ப். குற்றப் பின்னணி உடையவர்களை நாடு கடத்தப் போவதாக உறுதிமொழி அளித்திருக்கிறார்,

ட்ரம்பின் பிரசார துறை இந்த குற்றச்சாட்டு பற்றி இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை

தொடர்புடைய தலைப்புகள்