இராக்: ஐ.எஸ் குழுவினரிடம் தப்பியவர்கள் சாலையோரம் இருந்த குண்டு வெடித்ததில் பலி

இராக்கின் வடக்கில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து தப்பிக்கும் போது, சாலையோரம் இருந்த குண்டுகள் வெடித்ததில் 17 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டு போலிசார் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள ஹவிஜா என்ற நகரிலிருந்து ஒரு லாரியில் குடும்பங்கள் தப்பிய போது இரு வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆளானர்கள்.

இவர்களுடன் ரோந்து காரில் சென்ற ஒரு போலிஸ் அதிகாரியும் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டார்.

இதற்கிடையில், ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள மொசூல் நகரை மீண்டும் கைப்பற்றும் பெரு முயற்சியில் இராக் அரசு படைகள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளன.

இரு தரப்புகளிலிருந்தும் மோர்டார் மற்றும் துல்லியமாக குறிவைத்து சுடும் ஸ்னிப்பர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.

கிழக்கு பகுதியில் ராணுவம் கைப்பற்றியுள்ள சுற்றுப்புற பகுதிகளை மேலும் தக்கவைத்துக் பணியில் ஈடுபட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்