பிரிட்டிஷ் டென்னிஸ் வீரர் ஆண்டி மர்ரீ தரவரிசை பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார்

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியிலிருந்து மிலோஸ் ரவோனிக் விலகியதைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் டென்னிஸ் சாம்பியன் ஆண்டி மர்ரீ ஆண்கள் பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Julian Finney
Image caption கோப்புப்படம்

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அரையிறுதி ஆட்டத்திலிருந்து மிலோஸ் ரவோனிக் விலகினார்.

இதன் காரணமாக, தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பதற்கு மர்ரீக்கு தேவைப்பட்ட வெற்றி கிடைத்தது.

கடந்த திங்களன்று, புதிய பட்டியல் வெளியான போது, உலகத் தரவரிசையில் முதல் இடத்திலிருந்த நோவாக் ஜோகோவிச்சை ஆண்டி மர்ரீ முந்தியுள்ளார்.

1973 ஆம் ஆண்டிலிருந்து கணினிமயமாக்கப்பட்ட தரவரிசைப்பட்டியல் வெளியாகத் தொடங்கியதிலிருந்து இந்தப் பட்டத்தை கைப்பற்றிய முதல் பிரிட்டிஷ் வீரர் என்ற பெருமையை ஆண்டி மர்ரீ பெறுகிறார்.

தொடர்புடைய தலைப்புகள்