சமூக ஊடகங்களும் பெண்களுக்கு கண்ணிவெடி களங்கள் ஆகலாம்

பிற்போக்கு சமூகங்களிலுள்ள பெண்களுக்கு சமூக ஊடகங்களில் ஆபத்துகள் நிறைந்திருக்கலாம். எந்தவொரு இரண்டாவது சிந்தனையும் இன்றி மேற்குலகப் பெண்கள் பதிவிடுகின்ற புகைப்படங்கள், வட ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தெற்காசியாவில் தீவிர சர்ச்சைக்குரியவைகளாக இருக்கலாம்.பிபிசியின் ஐந்து பெண் செய்தியாளர்கள் கீழ்காணும் புகைப்படங்கள் தங்களுடைய நாடுகளில் எவ்வாறு பார்க்கப்படும் என்று விளக்குகின்றனர்.

கட்டி அணைத்தல்

அல்மா ஹாஸ்சோயுன் (சிரியா): ஜோடிகள் கட்டிப்பிடிப்பது பொதுவாக ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாவதில்லை.

அத்தகைய புகைப்படங்களை பதிவேற்றுவது பற்றி பெண்கள்தான் கவலையடைகின்றனர்.

இந்த உறவு தொடராவிட்டால், இன்னொரு மனிதரோடு முந்தைய உறவை சுட்டிக்காட்டும் புகைப்படங்கள் சமூக அளவில் ஏற்றுகொள்ளப்படாமல் போவதுதான் அதற்கு முக்கிய காரணமாகும்.

நம்முடைய நண்பர்கள் பட்டியலில் குடும்ப உறுப்பினரும், சுற்றத்தினரும் இருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

உறவு எவ்வளவுக்கு அலுவலக சார்பாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு அதுபோன்ற புகைப்படங்கள் பதிவேற்றப்படுவதை என்னுடைய ஃபேஸ்புக் பதிவுகளில் இருந்து நான் கவனித்திருக்கிறேன்.

ஒரு ஜோடி பல ஆண்டுகளாக ஒன்றாக இருந்திருக்கலாம். பொதுவாக, நிச்சயதார்த்தம் நடைபெற்றால் அதில் அந்த ஜோடி ஒன்றாக இருப்பதை ஃபேஸ்புக்கில் அவரை பின்தொடர்வோர் காணலாம். அவ்வளவுதான்.

ஆனால், எல்லா சமூகங்களை போலவும், சிரியாவிலும் வேறுபட்ட சமூகங்கள் உள்ளன. "இளம் சிரியர்கள்" அவர்களின் சமூக ஊடகங்களில் என்ன பதிவேற்றுவர் அல்லது பதிவேற்றாமல் இருப்பர் என்பது, அவர்களின் இடம், கல்வி மற்றும் சமூகப் பின்னணிகள், குடும்பம் மற்றும் நண்பர்கள் வட்டம், அந்நபரின் நம்பிக்கைகள் மற்றும் சிந்தனைகளை பொறுத்து வேறுபடுகிறது.

திருமணத்தில் நடனமாடுதல்

அம்பர் ஷாம்சி (பாகிஸ்தான்): சில ஆண்டுகளுக்கு முன்னால், சிறிய மண் குடிசை போன்று தோன்றிய வீட்டின் கீழே உட்கார்ந்து நான்கு பெண்கள் கைதட்டி பாடிக் கொண்டிருப்பதை போன்ற செல்பேசி காணொளி பதிவு இணையத்தில் வலம் வந்தது.

பிரகாசமான வண்ணமய கழுத்துத் துண்டுகளை அவர்களுடைய தலையில் அணிந்திருந்தனர். அவர்கள் பாடிய வேளையில், இரண்டு ஆண்கள் எழுந்து நடனமாட தொடங்கினர்.

எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நன்றாக இருப்பதைபோலவே தோன்றியது. ஆனால், திடீரென அந்நிகழ்வு சோகமாக மாறியது.

பாகிஸ்தானின் வட மேற்கில் இருக்கின்ற ஒரு தொலைதூர மலைப்பகுதியில் இருக்கும் ஒரு கிராமத்தில் எடுக்கப்பட்ட காணொளி தான் அது.

அவ்வாறு இரு பாலினங்கள் சேர்ந்து உறவாடுதல், நடனமாடுதல், பாடுதல் இன்னும் மோசமாக, இவ்வாறு காணொளியை பொதுவாக பகிர்வது அனைத்தும் அங்கு தவறானவை.

அந்த பெண்களும், ஆண்களும் கொல்லப்பட வேண்டும் என்று மூத்தோர் கவுன்சில் கட்டளையிட்ட அறிக்கைகள் விரைவாக வெளிவரத் தொடங்கின.

முகத்திரை அணிவது மீறப்படுகிறது என்றால், இழந்த கௌரவத்தை மீட்டெடுப்பதற்கு மரணம்தான் ஒரே வழியாக பார்க்கப்படுகிறது.

ஒரு வகையில் முகத்திரை அணிவது மீறப்படுவது என்பது இப்போது எண்ணியல்மயமாக்க நிலையிலும் விரிவாகியிருக்கிறது.

இந்நாட்டில் பிற்போக்குத்தனம் சற்று குறைவாக இருக்கின்ற பகுதிகளில் பெண்கள் திருமணங்களில் நடனமாடுகின்றனர் மற்றும் பாடுகின்றனர். ஆனால், அவ்வாறு செய்கின்றபோது, அங்கு இருக்கின்ற புகைப்படக் கலைஞர்கள் தங்களுடைய கேமராக்களை அணைத்துவிட கேட்டுகொள்ளப்படுகிறார்கள் அல்லது ஆண்கள் வெளியே அனுப்பப்பட்டுவிடுகிறார்கள்.

தற்போதைய நிலைமை: ஓர் உறவில்

சஹார் ஸான்டு (இரான்): ஒரு தலைமுறைக்கு முன்னதாக சிந்திக்கவே முடியாததாக இருந்த திருமணம் செய்து கொள்ளாமலேயே கூடி வாழ்தல் என்பது, இன்னும் சட்டப்பூர்வமற்றதாக இருந்தலும், கூடி வாழும் இளம் இரானிய ஜோடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

டின்டர் போன்ற ஆண்களும், பெண்களும் தங்களுடைய துணைகளை தேடிக்கொள்கின்ற டேட்டிங் செயலிகள் தெஹ்ரானில் தொடங்கப்பட்டுள்ளன.

தலைநகரில் வாழ்கின்ற சில நடுத்தர வர்க்க பெண்களுக்கு அதிக எண்ணிக்கையில் வேறுபட்ட ஆண் நண்பர்களை கொண்டிருப்பதும், சமூக ஊடகங்களில் உறவுகளின் நிலைமைகளை ஒழுங்காக மாற்றி வருவதும் திடீரென நவீன பாணியாகியுள்ளது.

இளைஞர்கள், தங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதற்காக கைது செய்யப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதால், பெரும்பாலோர் சமூக ஊடக கணக்குகளை யாரென்று அறியாத வகையில் அனாமதேயக் கணக்காக வைத்திருப்பதையே தெரிவு செய்கின்றனர்.

இது நகர நடுத்தர வர்க்கத்திற்கு பொருந்துகிறது. பெரும்பாலான மக்களுக்கு வாழ்க்கையில் இன்னும் அதிக கட்டுப்பாடுதான் காணப்படுகிறது.

பிற்போக்கான மற்றும் மிகவும் பக்தியான குடும்பங்களில் இணையத்தில் தற்போதைய நிலைமையை பதிவது, அல்லது அவ்வாறு அவர்கள் செய்வதாக இருந்தால் அவர்களுடைய குடும்பங்கள் மற்றும் அதிகாரிகளின் கண்களில் தெரியாத வகையில் மிகவும் ரகசியமாக அந்த இணையப் பக்கங்களில் வைக்கப்படுவதாக தெரிகிறது.

உதடு குவித்த முகம்

சயிதா அக்தர் (வங்கதேசம்): சமூக ஊடகப் பதிவில், ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமில் சுயமாக எடுத்த புகைப்படத்தை ஒரு பெண் வெளியிட்டால், அவர் மிகவும் மரியாதைக்குரிய பெண்ணாக கருதப்படுவார்.

ஒரு தொலைக்காட்சி பிரமுகராக, திரைப்பட நட்சத்திரமாக, ஒரு மாடல் அழகியாக அல்லது பாடகர் போன்ற பிரபலமான ஆளுமையாக அந்த பெண் இருந்தால் மட்டுமே இவ்வாறு ஏற்கப்படுகிறது.

அத்தகைய நிலைமையில், பல ஆண்கள் அந்த படத்தை விரும்புவதாக கிளிக் செய்வர்.

இருப்பினும், அது அவர்களுடைய குடும்ப உறுப்பினராகவோ, ஒரு நெருங்கிய நண்பராகவோ இருந்தால் இது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

அங்கொன்றும், இங்கொன்றுமாக தெரிவு செய்யப்படும் இத்தகைய படங்கள், உரிமையாளரின் அனுமதியின்றியே வரன் தேடும் இணையதளங்கள் போன்ற பிற இணையப் பக்கங்களில் பயன்படுத்தப்படுவதும் சிலவேளைகளில் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

டாக்காவில் இது போன்று நிகழ்ந்திருக்கிற ஒரு மாணவியிடம் நான் பேசினேன். அவருடைய பல்கலைக்கழகத்தாலும், உறவினர்களாலும் கேலிக்கும், இகழ்ச்சிக்கும் அவர் உள்ளாக்கப்பட்டிருக்கிறார்யிருக்கிறார்.

சுயமாக எடுத்த கவர்ச்சி புகைப்படம்

சானா சாஃபி (ஆப்கானிஸ்தான்): இந்த புகைப்படம் வெட்கத்திற்குரியதாகவும், பொருத்தமற்றதாகவுமே கருதப்படுகிறது.

பெரும்பாலான மக்கள் கூறிக்கொள்வது போல இங்குள்ள ஒரு பெண் "மரியாதை தொகுப்பின்" பகுதியாக இன்னும் கருதப்படுகிறார்.

அவருடைய ஒவ்வொரு அசைவும், அவருடைய எதிர்காலம் பற்றியது மட்டுமல்ல, அவரது குடும்பத்திற்கும் பெரும் தொடர்பு இருப்பதையே பொருள்படுத்துகிறது.

ஆப்கன் சமூகத்தில் பாலினப் பாகுபாடு காணப்படுகிறது. வேற்று பாலினத்தவரோடு கலந்துரையாடுவது பெரும்பாலும் பெரிய நகர பழக்கமாக நின்றுவிடுகிறது.

தந்தையர், சகோதரர்கள், தாத்தாக்கள், மைத்துனர்கள் மற்றும் மாமாக்களிடம் மட்டுமே ஒரு பெண் சுதந்திரமாக பழக முடிகிறது.

பெண்கள் எவ்வாறு ஆடை அணிந்திருக்க வேண்டும் என்பதற்கு ஆப்கானியர்கள் சிறந்த முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.

தலையை மூடுகின்ற துணியிணை எடுத்துவிடுவது அல்லது உடல் அங்கங்கள் தெரியும் அளவிலான ஆடைகளை வீட்டின் நான்கு சுவர்களுக்கு வெளியே அணிவது தடை செய்யப்படுகிறது.

இதேபோல, ஒரு பெண் படுக்கையறையில் டி-சர்ட் அல்லது பைஜாமா அணிந்திருப்பதை சுயமாக புகைப்படம் எடுத்து பகிர்ந்து கொண்டால், விமர்சனத்திற்கு உள்ளாவார். கடும்போக்காக "ஒழுக்கக்கேடு" என்றும் அவர் குற்றச்சாட்டுக்கு உள்ளாகலாம்.

பல பெண்களுக்கு சமூக ஊடகக் கணக்கே இல்லை. அதனை வைத்திருப்போரில் பெரும்பாலோர் தங்களுடைய புகைப்படங்களை பதிவேற்றுவது இல்லை.

நீங்களும் பங்கேற்கலாம்.......

தற்போது இருக்கின்ற புதிய, கவலை ஒன்றை சுட்டிக்காட்டும் தொடர் செய்திகளில் இதுவும் ஒன்று..

உலகில் இருக்கும் சில மிகவும் பிற்போக்கான சமூகங்களில், இளைஞர்களை, பெரும்பாலும் பெண்களை மிரட்டவும், அச்சுறுத்தி பணம் பறிக்கவும், வெட்கத்திற்கு உள்ளாக்கவும் தனிப்பட்ட அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்தும் புகைப்படங்களை பயன்படுத்துவது நடைபெறுகிறது.

எல்லா செய்திகளையும் நீங்களும் ஆய்ந்தறிந்து, இங்குள்ள கலந்தாய்வில் பங்கு பெறலாம்.

தொடர்புடைய தலைப்புகள்