"அலெப்போவில் கிறித்துவர்கள் விரட்டப்படுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்"

சிரியா நகரான அலெப்போவில், போருக்கு முன் அங்கு வாழ்ந்த கிறித்துவர்களில் ஒரு சிலரே தற்போது வாழ்கின்றனர் என அந்நகரின் பேராயர் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

கிறித்துவர்கள் அந்நகரிலிருந்து விரட்டப்படுவதை தடுக்க மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரிட்டனுக்கான தனது விஜயத்தின் போது பேராயர் ஷான் க்ளேமா ஷான்பர்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.

அலெப்போவில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தின் மீது போரின் போது ஐந்து முறை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும், அந்த கட்டடத்தில் இனி இருப்பது சாத்தியமற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குளிர்காலம் நெருங்குவதால், அங்குள்ள மக்கள் உணவு, சுகாதார வசதி, மற்றும் இருப்பிடம் ஆகியவற்றை பெறுவது மேலும் கடினமாகும் என பேராயர் கவலை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்