நிகராகுவா அதிபர் தேர்தல் : மீண்டும் வெல்வாரா டேனியல் ஓர்டேகா?

நிகராகுவா நாட்டின் அதிபர் தேர்தல் இன்னும் சற்று நேரத்தில் துவங்கவுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption டேனியல் ஓர்டேகா மற்றும் அவர் மனைவி ரொசாரியோ முரிலியோ (கோப்புப் படம்)

நிகராகுவாவின் தற்போதைய அதிபர் டேனியல் ஓர்டேகா நடப்பு தேர்தலில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது மனைவியான ரொசாரியோ முரிலியோ துணை அதிபர் பதவிக்கு வேட்பாளராக உள்ளார்.

தற்போதைய நடைமுறைக்கேற்ற பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்தியதற்காக அவர் புகழ் பெற்றதாக செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், ஓர்டேகா அதிக சர்வாதிகார போக்குடன் செயல்படுவதாகவும், எதிர்கட்சிகளை நசுக்கும் போக்குடன் செயல்படுவதாகவும் விமர்சகர்கள் அவர் மீது குற்றம்சாட்டுகின்றனர்.

கடந்த 1979-ஆம் ஆண்டில் நிகராகுவாவின் சர்வாதிகார தலைவரும், அதிபருமான அனடாஸியோ சோமாஸோ டேபிலேவின் ஆட்சியை கவிழ்த்த சாண்டினிஸ்டா கொரில்லா குழுவின் முன்னாள் தளபதியாக டேனியல் ஓர்டேகா செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.