டமாஸ்கஸில் சிரியா அரசாங்கம் நடத்திய தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; 25க்கும் மேற்பட்டோர் காயம்

டமாஸ்கஸின் புறநகரில் போராளிகள் வசமுள்ள பகுதியில் அரசாங்க படையினர் நடத்திய குண்டு தாக்குதலில் குறைந்தது 6 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption டமாஸ்கஸில் சிரியா அரசாங்கம் நடத்திய தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; 25க்கும் மேற்பட்டோர் காயம்

ஹரிஸ்டா நகரில் உள்ள மழலையர் பள்ளி ஒன்றிற்கு அருகே ஷெல் குண்டுகள் வீசப்பட்டதாக பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிரியாவுக்கான மனித உரிமைகள் கண்காணிப்பகமானது தெரிவித்துள்ளது.

பள்ளியின் முதல் இடைவேளை நேரத்தில் இந்த தாக்குதல் நிகழ்ந்ததாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்ததாக ஓர் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மேலும், கொல்லப்பட்ட 6 குழந்தைகளை தவிர்த்து, மேலும் 25க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்